வி வி டெக்கார்டு லேப்ஸ் பவுண்டேஷன் துவக்க விழா கோலாகலம்
வி வி டெக்கார்டு லேப்ஸ் பவுண்டேஷன் துவக்க விழா கோலாகலம்
ADDED : மே 15, 2026 11:04 PM
கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில், ‘டெக்கார்டு லேப்ஸ் பவுண்டேஷன்’ நிறுவனத்தின் துவக்க விழா நடந்தது.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை மற்றும் இஸ்ரேலின் ஏரியல் பல்கலை, ப்ரோமிட்--- ஏஐ லிமிடெட் நிறுவனம் இணைந்து அமைத்துள்ளன.
இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் அடையாளமாக இந்த முயற்சி அமைந்துள்ளது. தென்னிந்திய தொழில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மேம்பட்ட சைபர் செக்யூரிட்டி தீர்வுகளை வழங்கும் நோக்கத்துடன் இந்நிறுவனம் செயல்படவுள்ளது.
பயோ பார்மாக்ஸ் இண்டியா தலைமை நிர்வாக அதிகாரி சங்கர்மோகன், டெக்லேப் பவுண்டேஷன் துணை நிர்வாக இயக்குனர் டேவிட்பெலோஸ்டோஸ்கி, ரெக்டர் ஏரியல் பல்கலை பேராசிரியர் ஆல்பர்ட் பின்ஹசோவ், இஸ்ரேல் கான்சலேட் அதிகாரி யாயிர் ஒஷெரோப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
உலகளாவிய இணைய பாதுகாப்பு தேவைகள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் இந்தியா– இஸ்ரேல் கல்வி மற்றும் தொழில் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில், டெக்கார்ட் லேப்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் துவக்க விழா நடந்தது.
