ADDED : ஜூலை 25, 2026 02:40 PM
கோவை: தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரி சார்பில், ‘உலகளாவிய திறன் மையங்கள்’ என்ற மாநாடு நடந்தது. கல்வித்துறையையும் தொழில்துறையையும் இணைக்கும் நோக்கில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
‘‘கோவையில் உலகளாவிய திறன் மையங்கள் குறித்த மாநாட்டை தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியே முதல்முறையாக நடத்தியுள்ளது,’’ என கல்லுாரி முதல்வர் ஜெகதீசன் தெரிவித்தார்.
பல்வேறு நிறுவனங்களில் நிர்வாக தலைமை பொறுப்பு வகிக்கும் ஸ்ரீராம் கிருஷ்ணமூர்த்தி, மோகன்பாபு, அருண் சசிந்திரன், வினய்குமார், விஜய் சாம்புவேல், நித்தி கலை செல்வன் ஆகியோர் மாணவர்களுக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கினர்.
கல்லுாரி செயலர் நீலராஜ், இயக்குனர் வினோத், நாஸ்காம் இயக்குனர் உதய சங்கர், டீன் (அகாடமிக்ஸ்)பாகீரதி மற்றும் நிறுவன தொடர்பு அதிகாரி பாரத் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர்.
