/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காத்திருக்கு 'இப்தார் ஸ்னாக்ஸ்'
/
காத்திருக்கு 'இப்தார் ஸ்னாக்ஸ்'
ADDED : ஏப் 07, 2024 12:53 AM

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் அருகில் வந்து விட்டது. ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் நோன்பு திறக்க கரும்புக்கடை, கோட்டைமேடு, சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில், உலக தரத்தில் 'இப்தார் ஸ்நாக்ஸ்' வகைகள் காத்திருக்கின்றன.
அதில், நோன்பு கஞ்சியை தாண்டி, சமோசா, வடை, போண்டா, ஜூஸ் வகைகள், நுங்கு பால், சர்பத், கபாப் என சுவையான ஸ்னாக்ஸ் கிடைக்கின்றன. கரும்புக்கடை, கோட்டைமேடு, சாய்பாபா காலனி பகுதிகளில் மாலை, 4:00 முதல் 6:30 மணி வரை கூட்டம் அலைமோதுகிறது.
கரும்புக்கடையில் கபாப் வகைகள், சமோசா, வெஜ் ரோல், சிக்கன் ரோல் என கிடைக்கும் பல்வேறு உணவு வகைகளை சுவைக்க, இஸ்லாமியர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் திரள்கின்றனர்.
கோட்டைமேடு பகுதியில் முட்டை சமோசா, கீமா சமோசா, மட்டன் சமோசா, கபாப் வகைகள், பேமஸ் சிக்கன் அலீம், மட்டன் அலீம், நுங்கு பால், மேங்கோ ஜூஸ் உள்ளிட்டவைகள் மக்களை கவர்கின்றன.
சாய்பாபா காலனி பகுதியில் உள்ள, 'ஷேக் டவுன்'ல் காஜர் கா ஹல்வா, ஐதராபாதி காடி, சிக்கன் மயோ ரோல், ஷாயி துக்டா, மகாபாத் கா சர்பத், கல்மி கபாப், அலீம் என வகைகள் எராளம்.
செல்வபுரத்தில் உள்ள விஜயலட்சுமி ஆம்லேட் சென்டரில், முட்டை பீட்சா, சிந்தாமணி முட்டை பரோட்டா என, 201 வகையான முட்டை ஆம்லேட் வகைகள் கிடைக்கின்றன.
இந்த ரம்ஜானை முன்னிட்டு கலர் கலராக, விதவிதமாக, புட்டீஸை சுண்டி இழுக்கும் பல்வேறு வகையான உணவு வகைகள், சிட்டியில் இறங்கி நாக்குக்கு சவால் விடுகின்றன.

