/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டு இயந்திரங்கள் வைக்கும் இருப்பு கிடங்கு லிப்ட் பழுது
/
ஓட்டு இயந்திரங்கள் வைக்கும் இருப்பு கிடங்கு லிப்ட் பழுது
ஓட்டு இயந்திரங்கள் வைக்கும் இருப்பு கிடங்கு லிப்ட் பழுது
ஓட்டு இயந்திரங்கள் வைக்கும் இருப்பு கிடங்கு லிப்ட் பழுது
ADDED : மே 16, 2024 04:33 AM
கோவை, : கோவையில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இருப்பு கிடங்கில் உள்ள லிப்ட் பழுதாகியுள்ளது. அவற்றை சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்டுகள், 'விவி பேட்' இயந்திரங்கள், தெற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள இருப்பு கிடங்கில் வைக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்படும். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். இக்கட்டடம் மூன்று தளங்களுடன் அமைந்திருக்கிறது. இங்குள்ள 'லிப்ட்' பழுதாகி இருந்ததால், உபயோகிக்க முடியாத சூழல் இருந்தது.
கடந்த ஏப்., 19ல் நடந்த லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்திய இயந்திரங்கள், ஓட்டு எண்ணிக்கை மையமான, ஜி.சி.டி., கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு, இருப்பு கிடங்கில் வைக்கப்படும். அதற்கு முன்னதாக, லிப்ட் பழுதை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று 'சீல்' அகற்றப்பட்டு, லிப்ட் பழுது ஆய்வு செய்யப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், அதை சரி செய்ய முயற்சித்தனர். பழுது பெரியளவில் இருந்ததால், தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு, அப்பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.