/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதிபார்க்கில் 'வாக்கிங்' செல்வோருக்கு 'வார்னிங்'
/
பாரதிபார்க்கில் 'வாக்கிங்' செல்வோருக்கு 'வார்னிங்'
பாரதிபார்க்கில் 'வாக்கிங்' செல்வோருக்கு 'வார்னிங்'
பாரதிபார்க்கில் 'வாக்கிங்' செல்வோருக்கு 'வார்னிங்'
ADDED : ஆக 16, 2024 08:25 PM

கோவை:பாரதிபூங்காவில் பட்டுப்போன மரங்களிலிருந்து விழும் கிளைகள், நடைபயிற்சி செல்வோரின் தலையை பதம் பார்க்கிறது. அதனால் நடைபயிற்சி செல்வோர் எச்சரிக்கையாக கவனமாகவும் இருக்க வேண்டும்.
கோவையில், உலகத்தமிழ் செம்மொழி மாநாடு 2010ல் நடந்த போது, மேம்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டது பாரதி பூங்கா. இப்பூங்காவில் பாரதிபார்க் மற்றும் சாய்பாபா காலனியில் வசிக்கும் பலர், அன்றாடம் காலை மற்றும் மாலை நேரங்களில், நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.
ஆனால், இங்குள்ள மரங்களின் கிளைகள் பட்டுப்போய் சாய்ந்துவிட்டன. சில கிளைகள் அவ்வப்போது விழுந்து, நடைபயிற்சி செல்வோருக்கு மிரட்டல் விடுகின்றன.
நடைபயிற்சி செல்லும் சிலர் மீது, மரக்கிளைகள் விழுந்து காயமடைந்துள்ளனர். பொது நலன் கருதி, மாநகராட்சி நிர்வாகம், பட்டுப்போன மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று நடைபயிற்சி மேற்கொள்வோர் வலியுறுத்தியுள்ளனர்.

