/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடிக்கு குடிநீர் இணைப்பு வழங்கியாச்சு! பணியாளர்கள், மாணவர்கள் நிம்மதி
/
அங்கன்வாடிக்கு குடிநீர் இணைப்பு வழங்கியாச்சு! பணியாளர்கள், மாணவர்கள் நிம்மதி
அங்கன்வாடிக்கு குடிநீர் இணைப்பு வழங்கியாச்சு! பணியாளர்கள், மாணவர்கள் நிம்மதி
அங்கன்வாடிக்கு குடிநீர் இணைப்பு வழங்கியாச்சு! பணியாளர்கள், மாணவர்கள் நிம்மதி
ADDED : மார் 02, 2025 11:26 PM

வால்பாறை,; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, வால்பாறை அங்கன்வாடி மையத்திற்கு நகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கோ-ஆப்ரெட்டிவ் காலனி அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. மையத்தில், தற்போது, 20 குழந்தைகள் படிக்கின்றனர்.
இந்நிலையில், பள்ளி வளாகத்தில் இயங்கும் அங்கன்வாடிக்கு குடிநீர் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு சமைக்க, தண்ணீருக்காக ஊழியர்கள் அலைமோதினர்.
இந்நிலையில், அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் இருந்து, குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து சமைத்தனர். சமையலுக்கு மட்டுமின்றி, குடிநீர் மற்றும் கழிப்பறையில் பயன்படுத்துவதற்கும் தண்ணீர் இன்றி, மாணவர்களும், ஊழியர்களும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, நகராட்சி கமிஷனர் ரகுராமன் உத்தரவின் பேரில், நகராட்சி பணியாளர்கள் அங்கன்வாடி மையத்துக்கு, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கினர். நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையால், அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகள் நிம்மதியடைந்தனர்.
இதையும் கவனியுங்க!
வால்பாறை நகரில் உள்ள, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 280 மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளியில், வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த மாணவியர் படிக்கின்றனர்.
பள்ளியில் மாணவியருக்கு குடிநீர் வசதி இல்லாததால், மதிய உணவு இடைவேளையின் போது, குடிநீர் கிடைக்காமலும், கை கழுவ தண்ணீர் இன்றியும் மாணவியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கழிப்பறையில் தண்ணீர் இன்றி, சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்தில் உள்ள மின் மோட்டாரை சரி செய்ய, பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால், மாணவியர் தண்ணீர் வசதியின்றி அலைமோதுகின்றனர்.