/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிற்றோடைகளில் நீர்வரத்து; விலங்குகள் இனி வராது
/
சிற்றோடைகளில் நீர்வரத்து; விலங்குகள் இனி வராது
ADDED : ஜூன் 06, 2024 06:37 AM
கோவை : கோடை மழையால் வனப்பகுதிகளில் உள்ள சிற்றோடைகளில் நீர்வரத்து துவங்கியிருப்பதால், வன விலங்குகளின் தண்ணீர் தட்டுப்பாட்டு பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
கடும் வறட்சி காரணமாக, கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. வனவிலங்குகள் குடிநீரின்றி தவித்தன.
இதனிடையே முன்எப்போதும் இருந்திராத வகையில் நடப்பாண்டு கோடை மழை பெருமளவு பெய்தது.
இதனால், வனப்பகுதிகளில் பசுமை திரும்பி வருகிறது.
சிற்றோடைகளில் நீர் வரத்து துவங்கியிருப்பதோடு, ஆங்காங்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால், வன விலங்குகள் நீர் தேடி, அடிவார மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது தவிர்க்கப்பட்டுள்ளது என, வனவிலங்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.