/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து மீண்டும் பம்பிங் துவங்கியது
/
பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து மீண்டும் பம்பிங் துவங்கியது
பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து மீண்டும் பம்பிங் துவங்கியது
பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து மீண்டும் பம்பிங் துவங்கியது
ADDED : மே 20, 2024 11:05 PM

மேட்டுப்பாளையம்;பவானி ஆற்றில் தண்ணீர் வரத் துவங்கியதை அடுத்து, மூலையூர் நீரேற்று நிலையத்திலிருந்து, தண்ணீர் பம்பிங் செய்யப்படுகிறது.இதனால் ஆறு ஊராட்சிகளின் மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
சிறுமுகை அருகே மூலையூரில், பவானி ஆற்றில் கிணறு அமைத்து, குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதிலிருந்து, சின்னக்கள்ளிப்பட்டி, முடுதுறை, இரும்பறை, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம், ஜடையம்பாளையம் ஆகிய ஆறு ஊராட்சிகளுக்கு, கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தினமும், ஒரு கோடியே, 40 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இந்த தண்ணீரை சம்பரவள்ளியில் அமைத்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில், சுத்தம் செய்து, ஊராட்சிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வற்றியதால், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக, தண்ணீர் எடுக்கவில்லை. இதனால் ஊராட்சிகளுக்கு தேவையான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தந்த ஊராட்சி தலைவர்கள், போர்வெல் தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்கி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் வர துவங்கியுள்ளது. வறண்டு கிடந்த பவானி ஆற்றில், தண்ணீர் வந்ததால் மூலையூர் நீரேற்று நிலையத்தில் இருந்து, தண்ணீர் பம்பிங் செய்யப்படுகிறது.
இந்த தண்ணீரை சம்பரவள்ளி சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்து, ஊராட்சிகளுக்கு வழங்கப்படுகிறது.

