/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி ஆற்றில் தண்ணீர் குறைவு; ரயில் பெட்டி பராமரிப்பில் சிரமம்
/
பவானி ஆற்றில் தண்ணீர் குறைவு; ரயில் பெட்டி பராமரிப்பில் சிரமம்
பவானி ஆற்றில் தண்ணீர் குறைவு; ரயில் பெட்டி பராமரிப்பில் சிரமம்
பவானி ஆற்றில் தண்ணீர் குறைவு; ரயில் பெட்டி பராமரிப்பில் சிரமம்
ADDED : பிப் 21, 2025 11:17 PM
மேட்டுப்பாளையம்; பவானி ஆற்றில் தண்ணீர் குறைவாக வருவதால், பெட்டிகளை சுத்தம் செய்ய முடியாமலும், பெட்டிகளுக்கு தண்ணீர் நிரப்ப முடியாமலும், குடியிருப்புகளுக்கு போதிய குடிநீர் வழங்கும் முடியாத நிலையில், மேட்டுப்பாளையம் ரயில்வே நிர்வாகம் தவிக்கிறது.
இது குறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் துவங்கிய காலத்திலேயே, பவானி ஆற்றில் தனி குடிநீர் திட்டம் பெறப்பட்டது. ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, பெட்டிகளை சுத்தம் செய்தும், பெட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பியும், பயணிகள் தங்கும் அறைகளில் உள்ள கழிப்பிடத்தை சுத்தம் செய்ய தண்ணீர் தேவைப்படுகிறது. பணியாளர்கள் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பும் வழங்கப்பட்டு வருகிறது. ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால், ரயில்வே ஸ்டேஷனுக்கு தேவையான தண்ணீர் முழுமையாக ஆற்றிலிருந்து எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரயில்வே ஸ்டேஷனுக்கு தேவையான தண்ணீர் வழங்கவும், தடுப்பணையிலிருந்து தண்ணீர் திறந்து விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மேலாளர் கூறினார்.

