/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் உடைந்து நீர் விரயம்; குட்டை போன்று தேங்கியது
/
குழாய் உடைந்து நீர் விரயம்; குட்டை போன்று தேங்கியது
குழாய் உடைந்து நீர் விரயம்; குட்டை போன்று தேங்கியது
குழாய் உடைந்து நீர் விரயம்; குட்டை போன்று தேங்கியது
ADDED : மே 24, 2024 10:39 PM

பொள்ளாச்சி, - பொள்ளாச்சி கிளைச்சிறை மற்றும் நுாலகத்துக்கு செல்லும் வழித்தடத்தில், குழாய் உடைந்து குட்டை போல தண்ணீர் தேங்கியுள்ளது.
பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அருகே, கிளைச்சிறை, நுாலகம் மற்றும் முத்திரைத்தாள், கலால் துறை அலுவலகங்களும் உள்ளன. அரசுத்துறை அதிகாரிகள், நுாலகங்களுக்கு வருவோர் பயன்படுத்தும் வழித்தடத்தில், குழாய் உடைந்து குடிநீர் விரயமாகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'நகராட்சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 15 நாட்களுக்கு மேலாகிறது. இங்கு குடிநீர் வீணாகி, குட்டை போல தேங்கி நிற்பதால், அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இது குறித்து, அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் சீரமைக்கவில்லை. இதனால், சுகாதாரச்சீர்கேடு ஏற்படுகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குழாயை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.