/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாங்களும் மாநகராட்சியில்தான் வசிக்கிறோம்! குப்பை பிரச்னையால் ஆசாத் நகர் மக்கள் அதிருப்தி

ADDED : ஜூலை 17, 2024 01:17 AM

கோவை;மாநகராட்சி 86வது வார்டு, கரும்புக்கடை ஆசாத் நகர் பகுதியில் டன் கணக்கில் குப்பை குவிந்து கிடக்கிறது. குப்பையை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்துவதே இல்லை என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
ஆசாத் நகரில் பின்புறத்தில், டன் கணக்கில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு அதிகரிக்கிறது. குறிப்பாக மழைக்காலத்தில் மிகவும் மோசம்.
இங்கு, குப்பைத் தொட்டி வைக்க ஆண்டுக்கணக்கில் வலியுறுத்தியும் குப்பைத் தொட்டியே இல்லை. குப்பை, பெரிய மேடாக மாறிய பிறகு, புகார் தெரிவித்தால் எப்போதாவது வந்து அள்ளிச் செல்கின்றனர்.
மாநகராட்சியின் பிற பகுதிகளில், மட்கும் குப்பை, மட்காத குப்பை என தனியே பிரித்து வாங்குகின்றனர். நேரில் சென்று, குப்பையை வாங்குகின்றனர்.
குப்பையை தனியாக கவரில் எடுத்துச் சென்றாலே, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என, தூய்மைப் பணியாளர்கள் எச்சரிக்கும் அளவுக்கு, ஓரளவேனும் சுகாதாரம் பேணப்படுகிறது.
ஆனால், இங்கு டன் கணக்கில் குப்பை சேர்ந்தாலும், அள்ள ஆள் வருவதில்லை. தினமும் குப்பை வண்டி வந்து வாங்கிச் செல்ல வேண்டும். அல்லது குப்பைத் தொட்டி வைத்து, வாரத்தில் இருமுறை அள்ளிச் செல்ல வேண்டும்.
நாங்களும் மாநகராட்சியில்தான் வசிக்கிறோம்; வரி கட்டுகிறோம். ஆனால், எங்களை மூன்றாம் தர குடிமக்கள் போல, மாநகராட்சி நிர்வாகம் நடத்தக்கூடாது. இப்பிரச்னைக்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.