/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாங்கள் எப்போதும் தயார்; ஆம்புலன்ஸ் செயல்பாடு முகாமில் தகவல்
/
நாங்கள் எப்போதும் தயார்; ஆம்புலன்ஸ் செயல்பாடு முகாமில் தகவல்
நாங்கள் எப்போதும் தயார்; ஆம்புலன்ஸ் செயல்பாடு முகாமில் தகவல்
நாங்கள் எப்போதும் தயார்; ஆம்புலன்ஸ் செயல்பாடு முகாமில் தகவல்
ADDED : செப் 02, 2024 01:57 AM

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையத்தில் தேசிய மனித மேம்பாட்டு மையம் சார்பில், 108 ஆம்புலன்ஸ் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் கேலக்ஸி ரோட்டரி ஆகியன இணைந்து, 108 ஆம்புலன்ஸ் செயல்பாடுகள் குறித்த பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தியது.
இதில், ஆம்புலன்ஸின் செயல் பாடுகள் குறித்து பைலட்டாக பணியாற்றும் சிவசாமி பேசுகையில், அனைத்து வகையான விபத்துகள், பிரசவம் உள்ளிட்டவைகளின் அவசர தேவைக்கு, 108 ஆம்புலன்சை அழைக்கலாம். நாங்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்போம். தொடர்பு கொண்ட, 30 வினாடிகளில் எங்களுக்கு தகவல் வரும். எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் அவசர தேவைக்காக அழைக்கப்பட்டவரின் மொபைல் எண்ணுடன் பேசிக்கொண்டே எங்கள் வாகனம் புறப்படும். அதிகபட்சம் இரண்டு நிமிடங்களுக்குள் வாகனம் புறப்பட வேண்டும். முதல் உதவி மருத்துவ நிபுணர் முதல் உதவி அளித்து கொண்டே வாகனம் அரசு மருத்துவமனைக்கு செல்லும். பாதிக்கப்பட்டவர் அல்லது அவரின் உறவினர், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கேட்டால், எங்களது மாவட்ட மேலாளர் அனுமதியோடு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர், பிரசவ உபகரணங்கள், ஸ்கூப் போர்டு எனப்படும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு உதவும் உபகரணம், தீயணைக்கும் போர்வை,கடப்பாரை, மண்வெட்டி, கயிறு இது போன்ற அனைத்து முதலுதவி உபகரணங்களும் வாகனத்தில் தயார் நிலையில் இருக்கும் என்றார்.
அவசரத்துக்கு பயன்படும் கட்டண இல்லா மொபைல் எண்கள், 104 மருத்துவ ஆலோசனைக்கும், 102 பிரசவத்திற்கு பின்பு ஆலோசனைக்கும், 88888 88888 அனைத்து வகை அவசர உதவிக்கும், 14567 முதியோருக்கான அவசர கால உதவிக்கு எண்களை அழைக்கலாம். நிகழ்ச்சியில், முதல் உதவி பற்றிய செய்முறை விளக்கத்தை அவசர உதவி மருத்துவ நிபுணர் பவித்ரா பங்கேற்று விளக்கம் அளித்தார்.