/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆட்சி மாற்றத்துக்காக உங்களிடம் யாசிக்கிறோம்'
/
'ஆட்சி மாற்றத்துக்காக உங்களிடம் யாசிக்கிறோம்'
ADDED : ஏப் 10, 2024 12:54 AM
சூலூர்;''ஆட்சி மாற்றத்துக்காக உங்களிடம் யாசிக்கிறோம்,'' என, சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசினார்.
கோவை தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமாரை ஆதரித்து, சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் பேசியதாவது:
வரும் லோக்சபா தேர்தலில், அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். ஆட்சி மாற்றத்துக்காக உங்களிடம் யாசிக்கிறோம். பா.ஜ., ஆட்சியில் பணக்காரர்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளனர். காங்., ஆட்சியில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைவாக இருந்தது. இப்போது பல மடங்காக உயர்ந்துள்ளது. இந்த தேர்தலின் முடிவுகளை பொறுத்துத்தான், இந்தியாவின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

