/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு கட்ட வரைபட பிளான் வேண்டும்; வீட்டாரின் 'பிளானும்' வேண்டும்!
/
வீடு கட்ட வரைபட பிளான் வேண்டும்; வீட்டாரின் 'பிளானும்' வேண்டும்!
வீடு கட்ட வரைபட பிளான் வேண்டும்; வீட்டாரின் 'பிளானும்' வேண்டும்!
வீடு கட்ட வரைபட பிளான் வேண்டும்; வீட்டாரின் 'பிளானும்' வேண்டும்!
ADDED : ஜூன் 15, 2024 01:47 AM

வீடு கட்டும் முன் தெளிவான வரைபடம் உருவாக்க வேண்டும். அதற்கான முக்கிய குறிப்புகள், மதிப்புகளை தேர்ந்த இன்ஜினியரிடம் கேட்டு வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இதில், குடும்ப உறுப்பினர்களின் பங்கு மிக முக்கியம். எப்படி வீடு கட்ட வேண்டும், எத்தகைய பொருட்களை பயன்படுத்த வேண்டும், அறைகள் எப்படி இருக்க வேண்டும் என்று, குடும்பஉறுப்பினர்களிடம், ஆலோசனை கேட்க வேண்டும்.
நீங்கள் ஒரு திட்டம் வைத்திருந்து, வீட்டில் இருப்பவர்கள் வேறு மாதிரியாக திட்டம் வைத்திருந்தால், அது சிறப்பானதாக இருந்தால், அதை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை.
ஏனென்றால், வீடு கட்டிய பின், குறிப்பிட்ட பகுதிகளை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. வீடு கட்ட துவங்கியவுடன், பாதியில் வேறு சில ஐடியாக்கள் தோன்றுவது இயல்பு. ஆனால், கட்டிய பகுதிகளை இடிக்கும் போது, நமக்கு கூடுதல் செலவு ஏற்படும்.
எனவே, ஆரம்பத்தில் நீண்ட யோசனை மற்றும் ஆலோசனைக்குப் பின், கட்ட துவங்குவது நல்லது. வீடு கட்டும் போது, தற்போதைய நிலையை மட்டும் பார்க்கக் கூடாது. எதிர்கால திட்டமிடல் அவசியம்.
எதிர்காலத்தில் என்னென்ன தேவைகள் இருக்கப் போகிறது என்று யோசித்து, அதற்கேற்ப செயல்படுத்தலாம். அதிக வெளிச்சம், காற்று வீட்டுக்குள் வரும்படி அமைக்க வேண்டும். தங்களுக்கான முழு இடத்திலும் கட்டி விட வேண்டும் என்று நினைத்து விட வேண்டாம். குறிப்பிட்ட சில இடங்களை விட்டு, தோட்டங்கள் அமைக்க வழி ஏற்படுத்தலாம்.
ஆடம்பரமான பொருட்களை தேர்வு செய்வதை விட்டு, தரமான பொருட்களை தேர்வு செய்வதில் மெனக்கெட வேண்டும். கட்டுமானத்துக்கு தேவையான சிமென்ட், டைல்ஸ், பெயின்ட் போன்றவற்றை வாங்கும் போது, பல டீலர்களை அணுகி, விலை மற்றும் தரத்தை ஒப்பீடு செய்து வாங்குவது சிறந்தது.