/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்'
/
'ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்'
ADDED : ஆக 24, 2024 01:47 AM
வால்பாறை;வால்பாறையில் இருந்து, 8 கி.மீ.,தொலைவில் கருமலை பஜார் அமைந்துள்ளது. இதை சுற்றிலும் ஊசிமலை, வெள்ளமலை, அக்காமலை, பச்சமலை ஆகிய எஸ்டேட்கள் உள்ளன. இந்த எஸ்டேட்களில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இப்பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லாததால், இங்கு வசிக்கும் தொழிலாளர்கள், 8 கி.,மீ., தொலைவில் உள்ள வால்பாறை நகருக்கு செல்ல வேண்டியுள்ளது. சாதாரண காய்ச்சல், சளி என்றால் கூட வால்பாறை நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டியுள்ளது.
தொழிலாளர்கள் கூறுகையில், 'கருமலை பஜார் பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். எந்த அதிகாரியும், மக்கள் பிரதநிதியும் கண்டு கொள்வதில்லை.
மக்களின் நலன் கருதி கருமலை பஜாரில் துணை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்,' என்றனர்.