/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டின் நடுவே போர்வெல் மாற்று ஏற்பாடு செய்யணும்!
/
ரோட்டின் நடுவே போர்வெல் மாற்று ஏற்பாடு செய்யணும்!
ADDED : பிப் 27, 2025 08:49 PM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி, சடைய கவுண்டனூரில் ரோட்டின் நடுவே, போர்வெல் இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி, குள்ளக்காபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, சடையகவுண்டனூரில் கலைஞர் நகர் குடியிருப்பு அருகாமையில், 30 ஆண்டுகளுக்கு முன் மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக போர்வெல் அமைக்கப்பட்டது.
தற்போது, இப்பகுதியில், 15வது நிதி குழு மானியம் (2023 -- 24) திட்டத்தின் கீழ், ஒன்றிய கவுன்சிலர் நிதியில், 1.39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
இங்கு, போர்வெல் ரோட்டின் நடுவே உள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்லும் மக்கள் பலர் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, அப்பகுதி மக்கள் நலனை கருத்தில் கொண்டு, போர்வெல்லுக்கு, நீர்மூழ்கி மோட்டார் பொருத்தி மூடி போட வேண்டும். ரோட்டோரத்தில் தொட்டி கட்டி, போர்வெல் நீரை அதில் நிரப்பி, மக்களுக்கு வினியோகிக்க வேண்டும்.

