ADDED : ஜூன் 29, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
காந்திபுரம்: காந்திபுரம் செம்மொழி பூங்காவில் மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா ஆய்வு செய்தார். ரூ.27 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பன்னாட்டு மையம், பார்க்கிங், உடற்பயிற்சி கூடம் செயல்படும் விதத்தை பார்த்தார்.
பன்னாட்டு மையம் வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டும். செம்மொழி பூங்கா வளாகத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க வசதியாக, புகார் பெட்டி வைக்க வேண்டும். கியூ.ஆர்.கோடு மூலம் புகார்களை தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குடிநீர் சுத்திகரிப்பை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தில் பழுதடைந்த உபகரணங்களை சரி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் புதிய உபகரணங்களை வாங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு ரவி தேஜா உத்தரவிட்டார்.
