/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குமரகுரு கல்லுாரியில் நெசவு தொழில்நுட்ப மாநாடு
/
குமரகுரு கல்லுாரியில் நெசவு தொழில்நுட்ப மாநாடு
ADDED : மார் 04, 2025 06:30 AM

கோவை; குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் நெசவு தொழில்நுட்ப மற்றும் பேஷன் தொழில்நுட்ப துறை சார்பில்,ஒருங்கிணைந்த நெசவு மற்றும் பேஷன் தொழில்நுட்பம் குறித்த இரண்டு நாள் தொழில் மாநாடு நடந்தது. குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வாணவராயர் தலைமை வகித்தார்.
அவர் பேசுகையில், நெசவுத் துறை இப்போது உடைகளை மட்டும் உள்ளடக்கியதல்ல; விண்வெளி, வாகனம் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் ஒருங்கிணைந்துள்ளது. புதுமை, தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவை நெசவுத் துறையின் எதிர்காலம்,” என்றார்.
சைமா தலைவர் சுந்தரராமன், செயலாளர் செல்வராஜு, ஐ.டி.டி.ஏ., தலைவர் மற்றும் சி.இ.ஓ., அவினாஷ் மிஷ்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். 30க்கும் மேற்பட்ட தொழில் நிபுணர்கள் சிறப்புரை வழங்கினர்.
இந்தியன் டெக்னிக்கல் டெக்ஸ்டைல் அசோசியேஷன், தி டெக்ஸ்டைல் அசோசியேஷன் ஆப் இந்தியா, தமிழ்நாடு கோயர் வணிக மேம்பாட்டுக் கழகம் மற்றும் ஒ.இ.டி.ஐ.,ஆகியவற்றுடன் நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. குமரகுரு சென்டர் ஜவுளி தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மையமும், நிகழ்வில் துவங்கப்பட்டது.