ADDED : ஏப் 30, 2026 11:32 PM
*நடன போட்டி
குருகுலம் இன்டர்நேசனல் இன்ஸ்டியூட் வழங்கும், தேசிய அளவிலான ‘கிளாசிக் டான்ஸ்’ போட்டி, சுந்தராபுரத்தில் உள்ள செங்கப்பகோனார் திருமண மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் நடனக் கலைஞர்களுக்கு ‘நர்த்தகி 2026’ விருது வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு, 99949 09031 மற்றும் 73737 31573 தொடர் கொள்ளலலாம்.தேதி: 1 – 2 நேரம்: காலை, 8:00 மணி.
* சாகச பயிற்சி:
சாகச உலகில் ஒரு அற்புத அனுபவம்குழந்தைகளுக்கான சிறப்பு சாகச பயிற்சி முகாம்இயற்கை சூழலில், குழந்தைகள் கற்றலையும், மகிழ்ச்சியையும் ஒன்றாக அனுபவிக்க சிறந்த வாய்ப்பு. Vanaprastha Nature Camp மற்றும் Cluster Circle இணைந்து இந்த சிறப்பு சாகச முகாமை நடத்துகின்றன. இந்த முகாமில் சாகச கயிறு பயிற்சி, சுவர் ஏறும் பயிற்சி, பறக்கும் நீர் ராக்கெட் அமைத்தல், தோட்டக்கலை செயல்பாடுகள் உள்ளிட்ட முக்கிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வயது வரம்பு,7 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி முகாம் கட்டணம் உண்டு.இடம்: Vanaprastha Nature Campதேதி: மே 9 முதல் 11தொடர்புக்கு: 99651 33477
* வணிக பயிற்சி சுயதொழில் மற்றும் வணிகத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அது குறித்த வழிகாட்சி நிகழ்ச்சி நடக்கிறது. உங்கள் தொழிலைத் தொடங்க அல்லது விரிவுபடுத்த கோயம்புத்துார் ‘பிரான்சைஸ் ஷோ 2026’ நிகழ்ச்சி நடக்கிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச பிராண்டுகள், பிரான்சைஸ், மறுவிற்பனை மற்றும் ஸ்டார்ட்அப் வாய்ப்புகள் உள்ளன. நுழைவுக் கட்டணம், 750 ரூபாய்இடம் ரேஸ்கோர்சில் தாஜ் விவாந்தா ஓட்டல்.தேதி: 10
* அடுப்பில்லாமல் சமையல்
படையல் வழங்கும் ‘நோ ஆயில் நோ பாயில்’, அடுப்பில்லாமல் சமையல் ஆன்லைன் ஒர்க் ஷாப். 7 வகை காலை உணவு ரெசிப்பி, 7 வகை இரவு உணவு ரெசிப்பி செய்முறையுடன் விளக்கப்படுகிறது. 9790980022 என்ற மொபைலில் முன் பதிவு செய்யலாம்.தேதி 1–2நேரம் காலை 9:00 முதல் 11:00 மணி வரை
...
