தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாரவாரம் ஆரவாரம்

வாரவாரம் ஆரவாரம்

வாரவாரம் ஆரவாரம்


ADDED : ஜூலை 09, 2026 08:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 08:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஆன்மீக சொற்பொழிவு கோவை ராம்நகரில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில்  ஸ்ரீ ராமனுஜ சேவாஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் ஸ்ரீ உ.வே.ஆர்.வேங்கடேஷ் ஸ்வாமிகள் நிகழ்த்தும் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பரமன் அடி பணிதல், அரங்கன் அருள் சூடுதல், பரமபதம் பார்த்தல் ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவாற்றுகிறார்.

இடம்: அபிநவ வித்யா தீர்த்த பிரவசன மண்டபம்:

*திருக்குறள் சொற்பொழிவு திருக்குறள் உலகம் கல்விச்சாலை, வழங்கும் சிறப்புச் சொற்பொழிவு நடக்கிறது. இல்லறம் என்றால் என்ன? இல்லறத்தின் நோக்கம் என்ன ? இல்லறத்தில் கடைபிடிக்க வேண்டிய மாண்புகள் யாவை? இல்லறம் நல்லறமாக மாறுவது எப்படி? நல்லறத்தின் மூலம் வரக்கூடிய நன்மைகள் யாவை என்ற தலைப்புகளில்  திருக்குறள் ஆய்வு - விரிவுரையாளர் கணேசன் கருத்துரை வழங்குகிறார்.

இடம்: அபிநவ வித்யா தீர்த்த பிரவசன மண்டபம்: * நுால் அறிமுகம் கோவை வசந்தவாசல் கவிமன்றத்தின் 361-வது  இலக்கிய சந்திப்பு கூட்டம் நடக்கிறது. இதில் மறைந்த கவிஞர் புவியரசு அஞ்சலி செலுத்தும் வகையில், வானம்பாடியை வாழ்த்தும் வசந்தவாசல் என்ற தலைப்பில் நாடக இயக்குனர் மருதுார் கோட்டீஸ்வரன் அஞ்சலி உரையாற்றுகிறார். கவிஞர் நா.கி.பிரசாத் எழுதிய ‘ஒற்றைச்சுத்தியும் கொஞ்சம் ஆணிகளும்’ என்ற ஹைக்கூ கவிதை நுால் அறிமுகம் செய்யப்படுகிறது. கவிஞர் சிவசக்தி வடிவேல் நுால் குறித்து கருத்துரை வழங்குகிறார்.

இடம்: கோவை சி.பி.சி.: *அரங்கேற்றம் சுருதிலயா கலாகேந்திரா சார்பில், பரதநாட்டியம் சலங்கை பூஜை நடக்கிறது. இது மயூர கண கலைமணி எனப் போற்றப்படும் குரு பிரியங்கா மாணவியான ஜோஷினிநேத்ராவின் பாரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியாகும். குருவின் வழிகாட்டுதலில்  உத்வேகம் பெற்று இந்த மங்களகரமான சாலங்கை பூஜையின் மூலம் தனது பரத நாட்டியப் பயணத்வை துவங்கி இருக்கிறார்.

இடம்: மாருதி கானசபா ஆர்.எஸ்.புரம்.தேதி: 10:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us