/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கரா கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா
/
சங்கரா கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா
சங்கரா கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா
சங்கரா கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா
ADDED : ஆக 07, 2024 11:48 PM

கோவை: கோவை சரவணம்பட்டியில் உள்ள, சங்கரா வணிக அறிவியல் கல்லுாரியில் எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, வரவேற்பு விழா நடந்தது.
சங்கரா கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் ராதிகா வரவேற்றார். தலைமை விருந்தினராக பங்கேற்ற, ஸ்டேட் பாங்க் துணை பொது மேலாளர் பாலபத்ரபட்ருனி சங்கர் பேசுகையில், முந்தைய காலத்தில் கவனச்சிதறல்கள் குறைவாகவே இருந்தன. தற்போது மொபைல்போன் வசதியாலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் கவனச்சிதறல்களை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மொபைல் போனால், செயலாக்கமும் முடியும்; செயல்பாடுகளை தடுக்கவும் முடியும். எவ்வாறு நாம் பயன்படுத்துகிறோமோ அதை பொறுத்து, நமது முன்னேற்றம் இருக்கும். ஒரு வேலையை விரும்பிச் செய்வதால், மகிழ்ச்சி உண்டாகும், வெறுப்புடன் செய்தால் மன அழுத்தம் மட்டுமே மிஞ்சும், என்றார்.
விழாவில், கவுரவ விருந்தினராக 'இன்டலக்சுவல் அரேனா' நிறுவன இயக்குனர் கோவிந்தராஜன், ஆடிட்டர் ருத்ரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்கரா கல்வி நிறுவனங்களின் துணை, இணை செயலாளர் சந்தியா நன்றி தெரிவித்தார்.