/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்துஸ்தான் கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
/
இந்துஸ்தான் கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூலை 10, 2024 11:39 PM

கோவை : நவஇந்தியா, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., பட்டப்படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. கல்லுாரியின் செயலர் சரஸ்வதி, நிர்வாகச் செயலர் பிரியா தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக, மார்க் ஒன் ஈவென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதர்சன் சேஷாத்ரி, ரீனைசன்ஸ் ஈவென்ட்ஸ் இயக்குனர் ராகினி, புல் ஸ்டாக் சாப்ட்வேர் விசா நிறுவனத்தின் இன்ஜினியர் கோகுலன் ஆகியோர், மாணவர்களிடையே பேசினர்.
நிகழ்வில், மார்க் ஒன் ஈவென்ட்ஸ் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் கல்லுாரி சார்பில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம், மேலாண்மை சார்ந்த படிப்புகளில், ஈவென்ட்ஸ் மேனேஜ்மென்ட் குறித்த, புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
கல்லுாரியின் நிர்வாக அலுவலர் சிவசங்கர், எம்.பி.ஏ., இயக்குனர் சுதாகர், எம்.சி.ஏ., இயக்குனர் செந்தில் குமார் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.