/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய மாணவர்களுக்கு கதிர் கல்லுாரியில் வரவேற்பு
/
புதிய மாணவர்களுக்கு கதிர் கல்லுாரியில் வரவேற்பு
ADDED : செப் 07, 2024 02:33 AM

கோவை:கோவை நீலாம்பூரில் உள்ள கதிர் இன்ஜினியரிங் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கதிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கதிர் தலைமை வகித்தார். செயலாளர் லாவண்யா முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் கவிஞர் கவிதாசன் பேசுகையில், மாணவர்கள், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை தேடி தரும் விதமாக நடந்து கொள்ள வேண்டும். நல்ல பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். நல்ல நண்பர்களை தேர்வு செய்து முன்னேற்றத்துக்கான வழிகளை தேட வேண்டும்,'' என்றார்.
விழாவில், கதிர் இன்ஜினியரிங் கல்லுாரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் பிரகதீஷ் நன்றி தெரிவித்தார்.