/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு குறுமைய செஸ்; மாணவர்கள் அசத்தல்
/
மேற்கு குறுமைய செஸ்; மாணவர்கள் அசத்தல்
ADDED : ஆக 01, 2024 12:49 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் மேற்கு குறுமைய அளவிலான செஸ் போட்டியில், மாணவர்கள் திறமை காண்பித்து அசத்தினர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மேற்கு, கிழக்கு, கோட்டூர் மற்றும் மதுக்கரை குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளை நடத்த ஒவ்வொறு குறுமையத்துக்கும் பொறுப்பாளர்கள் நியமித்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சுற்றறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து, நேற்று மேற்கு குறுமைய அளவிலான செஸ் போட்டி, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் நடந்தது. போட்டியை, பொள்ளாச்சி ஆர்.கோபாலபுரம் எம்.எம்.எஸ்., பள்ளி ஒருங்கிணைத்து நடத்தியது.
11வயது, 14, 17 மற்றும், 19 வயது பிரிவு என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் - 147, மாணவியர் - 121 என, மொத்தம், 268 மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆறு ரவுண்டுகளாக போட்டிகள் நடைபெற்றன. அதில், மாணவர்கள், தங்களது முழுத்திறமையை வெளிப்படுத்தி காய்களை லாவகமாக நகர்த்தி போட்டியாளர்களை வீழ்த்த ஆர்வம் காட்டினர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் உரிய அறிவுரைகளை வழங்கி போட்டிகளை கண்காணித்தனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர் என, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.