sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

என்ன சொல்கிறார்கள் கோவை தொகுதி வேட்பாளர்கள்...?

/

என்ன சொல்கிறார்கள் கோவை தொகுதி வேட்பாளர்கள்...?

என்ன சொல்கிறார்கள் கோவை தொகுதி வேட்பாளர்கள்...?

என்ன சொல்கிறார்கள் கோவை தொகுதி வேட்பாளர்கள்...?


ADDED : மார் 25, 2024 01:07 AM

Google News

ADDED : மார் 25, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுவாணி அணையைத் துார் வாருவது குறித்து, கோவை தொகுதி வேட்பாளர்களின் கருத்துகளை அறிய, முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களை தொடர்பு கொண்டோம்.

பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை: கோவையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி மற்றும் பில்லுார் அணைத்திட்டங்கள். ஒவ்வொரு ஆண்டும் கோடையில், இவ்விரு அணைகளில் தண்ணீர் மட்டம் குறைவதும், அதனால் மக்கள் அவதிப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. நடப்பாண்டும், அணையின் நீர்மட்டம் குறைந்து, மக்களுக்கு கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தொலைநோக்கு சிந்தனை இல்லாத, தமிழக அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அதனால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் நலனுக்கு எதிராக தி.மு.க.,


கடந்த ஆண்டு ஏப்., தி.மு.க., கூட்டணி கட்சியான, கேரள மாநிலத்தை ஆளும் கம்யூ.,அரசு, பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே உள்ள, நெல்லியம்பதி என்ற இடத்தில் விதிகளை மீறி தடுப்பணை கட்டியுள்ளது. மேலும் இரண்டு தடுப்பணை கட்ட முடிவெடுத்துள்ளனர்.

சிறுவாணிஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைகளால், கோடை காலத்தில் பில்லுார் அணைக்கு வரும் நீர் மட்டம் குறையும்; கோவை மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்று, கடந்த ஆண்டே பொதுமக்களும், விவசாயிகளும் அச்சம் தெரிவித்தனர். ஆனால், எந்த பலனுமில்லை.

தி.மு.க.,அரசு, கேரளாவை ஆளும் கம்யூ.,அரசிடம் எதுவும் பேசாமல் தடுப்பணை கட்டும் முடிவை தடுக்க வலியுறுத்தாமல், தொடர்ந்து மவுனம் காக்கிறது. இதன் வாயிலாக, கோவை மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுகிறது.

போர்க்கால நடவடிக்கை தேவை


தி.மு.க., அரசு கோவையில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சிறுவாணி அணையின் குறுக்கே கட்டியுள்ள, தடுப்பணைகளின் தற்போதைய நிலை என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். 'இண்டியா' கூட்டணி நலனுக்காக, கோவை மக்களின் நலனை பலி கொடுக்காமல், கேரள கம்யூ., அரசு புதிய தடுப்பணைகள் கட்டாமல் தடுக்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார்: இந்த பிரச்னையைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். மேயராக கோபால கிருஷ்ணன் இருந்த போதிலிருந்து, நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், மேயராக இருந்தபோதும், இதற்காக நான் தொடர்ந்து குரல் கொடுத்துள்ளேன்; பல முயற்சிகளையும் எடுத்துள்ளேன். இப்போதும் இதற்கு முயற்சி எடுப்பேன்.வரும் 13ம் தேதி, கோவைக்கு முதல்வர் ஸ்டாலின் வரும்போது, சிறுவாணி அணை, பில்லுார் அணை இரு அணைகளையும் துார் வார வேண்டியதன் அவசியத்தை விளக்கி, நிச்சயமாக இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.

அ.தி.மு.க., வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்: அத்திக்கடவு-அவிநாசி திட்டம், புதிய தடுப்பணைகள் என நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தது, அ.தி.மு.க., அரசுதான். தி.மு.க., அரசாலும், மத்திய அரசாலும் கோவை மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை. சிறுவாணி அணை விவகாரத்தில், கேரள அரசு வஞ்சித்து வருகிறது.

கம்யூ., கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டுள்ள தி.மு.க., அரசு அதை கண்டுகொள்ளாமல் உள்ளது. தி.மு.க., தலைமையில் இருப்பவர்கள், குடும்பத்துக்காக உழைக்கிறார்களே தவிர, மக்களுக்காக அல்ல. நான் வெற்றி பெற்றவுடன், சிறுவாணி அணை உள்ளிட்ட நீர் மேலாண்மை விஷயத்தில், கோவை மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன்.






      Dinamalar
      Follow us