sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தகதகக்குது வெயில் தப்பிக்க என்ன செய்யலாம்! அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் 'அட்வைஸ்'

/

தகதகக்குது வெயில் தப்பிக்க என்ன செய்யலாம்! அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் 'அட்வைஸ்'

தகதகக்குது வெயில் தப்பிக்க என்ன செய்யலாம்! அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் 'அட்வைஸ்'

தகதகக்குது வெயில் தப்பிக்க என்ன செய்யலாம்! அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் 'அட்வைஸ்'


ADDED : மே 02, 2024 11:23 PM

Google News

ADDED : மே 02, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:''வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இயற்கை பானங்கள் கை கொடுக்கும்,'' என, சித்தா டாக்டர் நல்லதம்பி தெரிவித்தார்.

தமிழகத்தில், 15 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சதத்தை தாண்டியுள்ளது. மழை பொழிவை கணக்கிட்டு, 'அலர்ட்' சொன்ன காலம் மாறி, வெயிலின் தாக்கம், வெப்ப அலை வீசும் பகுதிகள் குறித்து, 'அலர்ட்' கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மற்ற ஆண்டுகளை விட தாக்கம் அதிகரித்துள்ளதால், நோய் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டுமென, சித்தா டாக்டர் விளக்கமளித்துள்ளார்.

வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் நல்லதம்பி கூறியதாவது:

கடும் வெயிலால் வியர்க்குரு, வேனல் கட்டிகள், அரிப்பு, ஒவ்வாமை போன்ற தோல்நோய்கள், நீர் இழப்பு, ரத்தம் உறைதல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க,சீரகம், 10 கிராம் எடுத்து, ஐந்து லிட்டர் நீரில் கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி சுத்தமான மண் பானையில் ஊற்றி, ஈரமான மணல் மீது வைத்து, ஒரு நாளுக்கு ஒருவர் குறைந்தபட்சம், மூன்று லிட்டர் நீராவது பருக வேண்டும். தினமும் தண்ணீரை புதியதாக காய்ச்சி பருக வேண்டும்.

நன்னாரி, விலாமிச்சு வேர், வெட்டி வேர் வகைக்கு ஐந்து கிராம் அளவில் எடுத்து சுத்தமான பருத்தி துணியில் கட்டி, பானை நீருக்குள் போட்டு பருகலாம். தேற்றான் கொட்டையினை உரைத்து குடிநீர் உள்ள பானையிலிட்டு, ஒரு மணி நேரம் கழித்து பார்த்தால், நீரில் உள்ள கசடுகள் பானையின் அடியில் தங்கிவிடும். இதை வடிகட்டி பின் பருகலாம். இதனால், நாவறட்சி, சிறுநீர் பாதை எரிச்சல் நீங்கும்.

நொறுக்கு தீனி, பன்னாட்டு குளிர்பானங்களை தவிர்த்து, நுங்கு, இளநீர், தர்பூசணி, முலாம்பழ ஜூஸ், எலுமிச்சை, விளாம்பழ ஜூஸ், நன்னாரி சர்பத், சுத்தமான பதநீர், ஓ.ஆர்.எஸ்., எனும் உப்பு சர்க்கரை கரைசல் பருகலாம். எலுமிச்சை பழச்சாறில் பானகம் செய்து அருந்தலாம்.

முதல் நாள் சமைத்த சோற்றை மண் சட்டியில் சிறிது கல் உப்பு சேர்த்து சுத்தமான நீர் ஊற்றி மூடிவைத்து, மறு நாள் காலையில் நீராகாரத்தோடு மோர் சேர்த்து அருந்த, உடல் சூடு குறையும்; குடற்புண் குணமாகும்.

மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ள கருங்குறுவை, கருப்புக்கவுனி அரிசி சோறாக இருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பு. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. வெயில் காலங்களில் தோசை, பூரி போன்ற உணவுகள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடிய உணவுகள், இறைச்சி, அதிக மசாலா சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. மதிய உணவாக, கம்பு, கேழ்வரகு களி, வெண்பூசணி சேர்ந்த நீர் மோர், பச்சடி, கற்றாழை சேர்ந்த மோர் குழம்பு, வேப்பம்பூ ரசம் மிக நல்லது. வேப்பம்பூ பித்தத்தை தணிக்க வல்லது. இரவு ஏழு மணிக்குள் உணவு சாப்பிட வேண்டும்.

வெள்ளரிக்காய், கொய்யா, பேரிச்சம்பழம், செவ்வாழைப்பழம் மற்றும் நார்ச்சத்துள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்வது நல்லது. உணவுகள் எளிதில் சீரணிக்க கூடியதாக இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். பரோட்டா, அதிக காரம், மாமிச உணவுகளை தவிர்க்கலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

ஆடையிலும் கவனம் இருக்கட்டும்!

எளிய தளர்வான பருத்தி ஆடை அணிய வேண்டும். காலை, 11:00 மணி முதல் மாலை, 3:00 வரை காற்றோட்டமுள்ள இடங்களில் இருக்க வேண்டும். ஜன்னல்களில், ஈரத்துணி அல்லது நீரில் நனைத்த வெட்டி வேர் திரை சீலை பயன்படுத்தலாம். குடை அல்லது தொப்பி அணிந்து வெளியே செல்லலாம்.குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், தொற்றா நோயால் பாதிக்கப்பட்டோர் கவனமுடன் இருக்க வேண்டும். வெறுங்கால்களில் வெளியே செல்ல வேண்டாம். வெயிலால் மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு அவர்களின் மீது குளிர்ந்த நீரை கவனமுடன் ஊற்ற வேண்டும்.மருத்துவ உதவிக்கு, '104' மற்றும் '108' எண்களை அழைக்கலாம்.பொதுமக்கள், துணை நோய் உள்ளோர் எளிய வீட்டுக்குறிப்புகளை தவிர, மற்ற சித்த மருந்துகளை சுயமாக கடைகளில் வாங்கி எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். பதிவு பெற்ற சித்த மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்று மருந்துகளை எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என, டாக்டர் அறிவுறுத்தியுள்ளார்.



எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்!

வாரத்துக்கு இருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் வெப்பம் நீங்கும். சுத்தமான செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், 250 மி.லி., எடுத்த அதில் சிறிது சீரகம், நான்கு மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்து, மிதமாக சூடேற்றி பின் ஆற வைத்து, உச்சி முதல் உள்ளங்கால் வரை சூடெழும்பாமல் தேய்த்து, 30 நிமிடங்கள் கழித்து பாசிப்பயிறு மாவினை கொண்டு தேய்த்து இளவெந்நீரில் குளிக்க வேண்டும்.எண்ணெய் தேய்த்து குளித்த அன்று பகலில் உறங்க கூடாது. முதியவர்கள் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல் வெப்பம் குறைந்து, தோல் நோய் ஏற்படாது.மேலும், அதீத வெயிலால், தினமும் இரு வேளை குளிப்பது நல்லது. மதிய வெயில் நேரத்தில் வெப்ப அனல் தாங்க முடியாவிட்டால், நிழலான, காற்றோட்டம் உள்ள பகுதியில் ஓய்வு எடுக்க வேண்டும், என, அறிவுறுத்தியுள்ளனர்.








      Dinamalar
      Follow us