sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கார்ப்பரேஷனில் நடக்கிறது 'மாஜி' ஆட்சி பா.ஜ.,வை பார்த்து பயப்படுது ஆளுங்கட்சி!

/

கார்ப்பரேஷனில் நடக்கிறது 'மாஜி' ஆட்சி பா.ஜ.,வை பார்த்து பயப்படுது ஆளுங்கட்சி!

கார்ப்பரேஷனில் நடக்கிறது 'மாஜி' ஆட்சி பா.ஜ.,வை பார்த்து பயப்படுது ஆளுங்கட்சி!

கார்ப்பரேஷனில் நடக்கிறது 'மாஜி' ஆட்சி பா.ஜ.,வை பார்த்து பயப்படுது ஆளுங்கட்சி!


ADDED : ஜூன் 25, 2024 12:28 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்க்கெட் சென்றிருந்த மித்ரா, காய்கறி கூடையுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

சூடாக பில்டர் காபி கொடுத்த சித்ரா, ''என்னப்பா... சிட்டியை பத்தி ஏதாச்சும் ஸ்பெஷல் இன்பர்மேஷன் இருக்குதா...'' என, கொக்கியை வீசினாள்.

காபி கோப்பையை வாங்கி உறிஞ்சிய மித்ரா, ''போலீஸ்காரங்க, கவர்மென்ட் மேல ரொம்பவெ அதிருப்தியில இருக்காங்க. கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில, கார் குண்டு வெடிச்ச சமயத்துல ஸ்பெஷல் டூட்டி பார்த்தவங்களுக்கு, இன்னைக்கு வரைக்கும் 'அலவன்ஸ்' கொடுக்கவே இல்லையாம்.

இதே மாதிரி, லோக்சபா எலக்சன்ல வேலைபார்த்த போலீஸ்காரங்களுக்கும், 'அலவன்ஸ்' கொடுக்காம இருக்காங்களாம். இரவு - பகலா வேலை பார்த்ததோடு, எதிரணி 'மூவ்'களை வேவு பார்த்து, உளவு சொல்லி விசுவாசமா இருந்தவங்க கூட, புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க,''

''ஒருவேளை... 'மலை' யானவருக்கு 'சப்போர்ட்' பண்ணி, தபால் ஓட்டு போட்டதால இப்படி செய்றாங்களோ... என்னவோ...''

''போலீஸ்காரங்களை பகைச்சுக்கிட்டா, ஆளுங்கட்சிக்கு தான்க்கா ஆபத்து. கள்ளச்சாராயம் காய்ச்சுனது மாதிரி, ஏதாச்சும் வில்லங்கத்துல சிக்க விட்டுடுவாங்கன்னு பேசிக்கிறாங்க,''

'நோ' சொன்ன அமைச்சர்


''லோக்சபா எலக்சன்ல நம்மூர்ல ஜெயிச்சதுக்கு பரிசா, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்குறதுக்கு தலைமையில பேசியிருக்காங்க. இதுசம்பந்தமா அவர்கிட்டயே கருத்து கேட்டாங்களாம். அவரு வேண்டாம்னு ஒதுங்கிட்டாராம்; இருந்தாலும், தொழில்துறையை சேர்ந்தவங்களை, 'டச்'ல வச்சிருக்கிறேன்னு உறுதி சொல்லியிருக்காராம்,''

''இப்போ, ஆளுங்கட்சியில, மாவட்ட செயலாளர் பதவியை கைப்பத்துறதுக்கு கடுமையான போட்டி நடக்குது. பதவியில இருக்கற மாவட்டங்களை துாக்குறாங்களோ, இல்லையோ, ரெண்டு தொகுதிக்கு ஒருத்தருன்னு, அஞ்சு மாவட்டம் உருவாக்கப் போறாங்களாம்.

அப்போ, கூடுதலா 'ரெண்டு' மாவட்ட பதவி கெடைக்குமாம். அந்த பதவியில ஒன்றை, அருந்ததியின சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு கொடுக்கணும்னு, தலைமைக்கு அழுத்தம் கொடுக்குறாங்க...''

''ஏன்னா... லோக்சபா எலக்சன்ல சிறுபான்மையினர் ஓட்டும், அருந்ததியர் இன ஓட்டும் ஆளுங்கட்சிக்கு ரொம்பவே கை கொடுத்திருக்கு. அதனால, அஞ்சுல ஒரு பதவியை அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவங்கள்ல படிச்சவங்களா, கட்சிக்காக உழைச்ச ஒருத்தரை தேர்ந்தெடுத்து நியமிக்கணும். மாற்றுக்கட்சியில இருந்து ஒட்டிக்கிட்டவங்களை நியமிக்கக் கூடாதுன்னு, உடன்பிறப்புகள் சொல்லியிருக்காங்களாம்,''

கெத்துக்காட்டும் புது எம்.பி.,


''நம்மூர் புது எம்.பி., கெத்துக்காட்ட ஆரம்பிச்சிட்டாராமே...''

''அதுவா... இதுவரைக்கும் நம்மூர்ல தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் யாருமே, தங்களது கார்ல போர்டு மாட்டுனது இல்லை. இப்போ தேர்வாகியிருக்கிற ராஜ்குமார், தன்னுடைய சொந்த கார்ல, தேசியக்கொடியின் பின்னணியில், நமது நாட்டின் தேசிய சின்னம் பொறிச்சு, மெம்பர் ஆப் பார்லிமென்ட், கவர்மென்ட் ஆப் இந்தியா - லோக்சபான்னு, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட எம்பளத்தை பொருத்தியிருக்காராம்,''

''வழக்கமா, எம்.பி.,க்களுக்கு கவர்மென்ட் கார் ஒதுக்குறதில்லை; சொந்தக்கார்ல இந்த மாதிரி, தேசிய சின்னம் பொருத்தலாமான்னு ஆபீசர்கள்கிட்ட தெளிவான பதில் இல்லையாம். ஆளுங்கட்சியை சேர்ந்தவங்களுக்கு எதிரா கமென்ட் சொன்னா, பதவிக்கு ஆபத்து வந்துருமோன்னு போக்குவரத்து துறையை சேர்ந்தவங்க பயப்படுறாங்களாம்; போலீஸ்காரங்களோ 'எஸ்கேப்' ஆயிடுறாங்களாம்,'' என்ற சித்ரா, நகர் வலம் செல்வதற்கு புறப்பட தயாரானாள்.

கோலோச்சும் 'மாஜி'


கார்ப்பரேஷன் குப்பை லாரி ஒன்று, சிக்னலை கடந்து சென்றது. அதைக்கவனித்த மித்ரா, ''நம்மூர் கார்ப்பரேஷன்ல இன்னமும், 'மாஜி'யோட ஆளுங்கதான் கோலோச்சுறாங்களாமே...''

''மித்து, கார்ப்பரேஷன்ல ஆபீசர்ஸ் பலரும் ஏ.டி.எம்.கே., ஆட்சியில 'மாஜி' தயவுல வந்தவங்க. இன்னைக்கு வரைக்கும் விசுவாசமா இருக்காங்க. 'அன்பு'க்குரிய அண்ணன், கோவைப்புதுார்ல, கார்ப்பரேஷன்ல வாங்குன அனுமதிய விட பெருசா, 20 ஆயிரம் சதுரடிக்கு விதிகளை மீறி பிரமாண்டமா பங்களா கட்டியிருக்காரு.

ஆட்சி மாறுனதும், 'ரிவைஸ்டு ப்ளான்' போட்டு, ஏற்கனவே கட்டுன கட்டடத்துக்கு அனுமதி கேட்டிருக்காரு. ஏ.டி.எம்.கே., ஆட்சியில, வலுவா சம்பாதிச்ச ஒரு லேடி ஏ.டி.பி.ஓ., 'பெனால்டி' மட்டும் போட்டு, அனுமதி கொடுத்து இருக்காராம்,''

''இதுல இன்னொரு பிரச்னையும் இருக்குதாம். 40 சென்ட் இடத்துல பங்களா கட்டியிருக்காங்க; வெறும் அஞ்சு சென்ட் மட்டும்தான், 'அப்ரூவ்டு சைட்டாம். மத்த இடம் 'அன்அப்ரூவ்டு சைட்'டுங்கிறாங்க. அந்த இடத்துல கட்டடம் கட்ட, எப்படி அனுமதி கொடுக்க முடியும்னு, சமூக ஆர்வலர் ஒருத்தர், தகவல் அறியும் உரிமை சட்டத்துல அனுமதி கேட்டு, 552 பக்கமுள்ள ஆவணங்களையும் நேர்ல போயி பார்த்துட்டாராம்,''

''அந்த ஆவணங்களை சட்டத்துக்கு உட்பட்டு நகலா கேட்டிருக்காரு. அதைக் கொடுக்காம, அந்தக் கட்டட ஓனருக்கே தகவல் சொல்லி, ஆட்சேபணை லெட்டர் வாங்கி, அதைக் காரணமா சொல்லி தகவல் தர மறுத்துட்டாராம்.

இந்த 'பில்டிங் வயலேஷன்' பத்தி, நம்ம ஊரு விஜிலென்ஸ்காரங்க மோப்பம் பிடிச்சு, நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடியே, அந்த பைல்ல இருந்த 552 பக்கத்தையும் ஜெராக்ஸ் எடுத்தாங்களாம். ஆனா, இப்ப வரைக்கும் எந்த ஆக்ஷனும் எடுக்கலை. இந்த விஷயத்தைக் காமிச்சு, ஒரு பெரிய தொகையைக் கறந்துட்டாங்களோன்னு சந்தேகம்கிளம்பியிருக்கு,''

மீண்டும் பதவி


''அக்கா... நீங்க சொல்றது கரெக்ட்டு தான். திராவிட மாடல் அரசுன்னு சொல்றாங்க. கம்ப்ளைன்ட் வந்தா துருவி துருவி விசாரிக்கிறாங்க; பக்கம் பக்கமா ரிப்போர்ட் வாங்குறாங்க. ஆனா, ஆக்சன் எடுக்கறதில்லை. ஆளுங்கட்சி தலையீடு வந்துச்சுன்னா, பைல கெடப்புல போடுறாங்களாம்... கிழக்கு மண்டலத்துல வரி வசூலரா இருந்த ஒருத்தரை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாத்துனது ஞாபகம் இருக்கா. அவருக்கு தெற்கு மண்டலத்துல வரி வசூலர் போஸ்டிங் போட்டுக் கொடுத்திருக்காங்க. கிழக்கு மண்டல உயரதிகாரிக்கு, எடுபிடி வேலை செய்றவங்க மேல, எந்த நடவடிக்கையும் எடுக்கலை,''

''ஆக்சன் எடுக்க முடியாத அளவுக்கு, ஆபீசருக்கு செல்வாக்கு இருக்கா... என்ன''

''பாட்சா பட ஸ்டைல்ல, மும்பையில நான் என்ன செஞ்சிட்டு இருந்தேன்னு சொல்ற மாதிரி கோவைக்கு யார் பரிந்துரையில, போஸ்டிங் வாங்கிட்டு வந்தாங்கன்னு சொல்லியிருக்காங்க... அதனால, 'கப்சிப்' ஆகிட்டாங்களாம்,''

ஆளுங்கட்சிக்கு பயம்


இருவரும் பேசிக் கொண்டே கலெக்டர் ஆபீஸ் நோக்கி, நடக்க ஆரம்பித்தனர். செஞ்சிலுவை சங்க ரவுண்டானாவை அ.தி.மு.க., கொடி கட்டிய கார் கடந்து சென்றதை பார்த்த மித்ரா, ''அக்கா, பா.ஜ.,வினரை பார்த்தாலே ஆளுங்கட்சிக்கு பயம் வந்துருச்சு போலிருக்கு. கள்ளச்சாராயம் சம்பவத்தை கண்டிச்சு ஆர்ப்பாட்டம் நடத்துறதுக்கு, பா.ஜ.,வுக்கு அனுமதி கொடுக்கலை. ஆனா, அ.தி.மு.க.,வுக்கு மட்டும் அனுமதி கொடுத்திருக்காங்க, பார்த்தீங்களா,'' என்றாள்.

''இதுல, ஒரு சூட்சுமம் இருக்கு. பா.ஜ.,வுல மாநில தலைவர் அண்ணாமலை, நம்மூர்ல இருந்தாரு. அவரோட பேச்சு, ஸ்டேட் முழுக்க எதிரொலிக்கும்னு ஆளுங்கட்சி தரப்புல பயந்துட்டாங்க. கட்சி ஆபீசுக்கு முன்னாடி, திரண்டு இருந்தவங்களை கைது செஞ்சாங்க. ஏ.டி.எம்.கே.,காரங்க, எதிர்க்கட்சிங்கற முறையில சம்பிரதாய சடங்கு போல ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்காங்க. தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கு இடையே, ஒரு புரிதல் இருக்குன்னு தாமரைக்கட்சிக்காரங்க சொலறாங்க,''

குழுவுக்குள் மோதல்


''மருதமலையில நடந்த, மாதிரி காரமடை அரங்கநாதர் கோவில்லயும் அறங்காவலர் குழு பிரச்னை நடக்குதாமே...''

''மித்து, மருதமலையில ஆபீசருக்கும், அறங்காவலர் குழுவுக்கும் இடையே முட்டல், மோதல் இருந்துச்சு. மேலிடத்துக்கு தகவல் சொல்லி, ஆபீசரை மாத்திட்டாங்க. காரமடை அரங்கநாதர் கோவில்ல அறங்காவலர் குழு தலைவருக்கும், அறங்காவலர்களுக்கும் மோதல் போக்கு அதிகமாகி இருக்காம். தலைவருக்கு எதிரா, முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஒரு அறங்காவலர் பெட்டிசன் அனுப்பியிருக்காரு. இவுங்களுக்குள்ள இருக்கற பிரச்னையில, கோவில் வேலை பாதிக்குதாம்,'' என்றபடி, கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தாள் சித்ரா.

அடாவடி கட்சிக்காரர்


ஆளுங்கட்சி கொடி கட்டி, மரத்தடியில் நின்றிருந்த காரை பார்த்த மித்ரா, ''சுல்தான்பேட்டை ஒன்றியத்துல, கள்ளப்பாளையம் பஞ்சாயத்து ஆபீசுக்குள்ள ஆளுங்கட்சியை சேர்ந்தவரு புகுந்து, கவர்மென்ட் ரெக்கார்டுகளை அள்ளிட்டு போயிட்டாராம். அவர் மேல ஆக்சன் எடுக்கறதுக்கு போலீஸ்காரங்க தயங்குறாங்க. கவர்மென்ட்டுக்கு இழப்பு ஏற்படுத்தியிருக்காருன்னு ஏகப்பட்ட புகார் வெளிச்சத்துக்கு வந்துட்டு இருக்குதாம். இருந்தாலும், ஆளுங்கட்சி கெத்துல ஹாயா வலம் வர்றாராம்...'' என்றபடி, செய்தி சேகரிக்க, கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தாள்.

அவளை பின்தொடர்ந்து சென்றாள் சித்ரா.






      Dinamalar
      Follow us