/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எந்த படிப்புக்கு என்ன நுழைவுத்தேர்வு? மாணவர்கள் அறிந்து கொள்ள தெளிவான விளக்கம்
/
எந்த படிப்புக்கு என்ன நுழைவுத்தேர்வு? மாணவர்கள் அறிந்து கொள்ள தெளிவான விளக்கம்
எந்த படிப்புக்கு என்ன நுழைவுத்தேர்வு? மாணவர்கள் அறிந்து கொள்ள தெளிவான விளக்கம்
எந்த படிப்புக்கு என்ன நுழைவுத்தேர்வு? மாணவர்கள் அறிந்து கொள்ள தெளிவான விளக்கம்
ADDED : மார் 25, 2024 01:22 AM

கோவை;கல்வியாளர் அஷ்வின் பேசியதாவது:
l தேசிய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு வினாத்தாள்களில், பாடக்கருத்துகள் அடிப்படையில், பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், வேகமாக முடிவெடுத்தல் குறித்த கேள்விகளே இடம்பெறுகின்றன. சிந்திக்கும் திறன் அடிப்படையில் தான், கேள்விகளை அணுக வேண்டும்.
l சி.யூ.இ.டி., தேர்வு எழுதினால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பை பெறலாம். வேளாண் படிப்பில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுக்கு ஒதுக்குவதால், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
l ஆர்க்கிடெக்ட் படிக்க, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால், என்.ஐ.டி மற்றும், ஸ்கூல் ஆப் பிளானிங் ஆர்க்கிடெக்ட் கல்வி நிறுவனங்களில் சேரலாம்.
l நாட்டா நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், தலைசிறந்த கல்விநிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பை பெறலாம்.
l ராணுவத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும், கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு, மாதந்தோறும் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு கிடைப்பதும் உறுதி. இதில், கலைப்பாடப்பிரிவு மாணவர்களும் சேரலாம்.
l நேவி, ஏர்போர்ஸ் துறைகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லுாரிகளில், இயற்பியல், வேதியியல், கணித பாடப்பிரிவு மாணவர்கள் சேர வாய்ப்பளிக்கப்படுகிறது.
l கணிதத்தில் சிறந்து விளங்கும் மாணவர்கள், சென்னை மேத்தமேட்டிக் இன்ஸ்டிட்யூஷனில் சேர்ந்தால், அதிக சம்பளத்துடன் ஜொலிக்கலாம்.
l நன்றாக படம் வரைபவர்கள், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டிசைனில் சேர, பிரத்யேக நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இதுபோன்ற பல்வேறு நுழைவுத்தேர்வுகள் உள்ளன. இதற்கு திட்டமிட்டு படித்தால், நல்ல சம்பளத்துடன், உயர்ந்த பதவிகளில் வேலை கிடைப்பது உறுதி. இவ்வாறு, அவர் பேசினார்.

