/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகளுக்கு வாட்ஸ் அப் குழு
/
விவசாயிகளுக்கு வாட்ஸ் அப் குழு
ADDED : செப் 02, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;விவசாயிகளுக்கு தேவையான விவரங்கள் உடனுக்குடன் விவசாயிகளை சென்றடையும் வகையில், 'வாட்ஸ் அப் குழு' ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பம், சந்தை நிலவரம், வானிலை முன்னறிவிப்புகள், மானியங்கள் போன்ற தகவல்கள், வட்டார அளவில் உள்ள விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், வாட்ஸ் அப் குழு செயல்படுத்தப்படும் என, 2023 - 24 நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், கோவை மாவட்டத்தில் எத்தனை வட்டாரங்களில் குழுக்கள் செயல்படுகின்றன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, வட்டார அளவில் இத்திட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.