/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை கலெக்டர் அலுவலக நுழைவாயில் திறப்பு எப்போது?
/
கோவை கலெக்டர் அலுவலக நுழைவாயில் திறப்பு எப்போது?
ADDED : ஜூன் 05, 2024 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், கலெக்டர் அலுவலக புதிய நுழைவாயில் திறப்பு விழா நடத்துவது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
கோவை லோக்சபா தொகுதிக்கு, புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.,ராஜ்குமார், தேர்தலின் போது கோவைக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர் அல்லது வீட்டுவசதித்துறை அமைச்சர், என இவர்களில் யாரை வைத்து திறப்பு விழா நடத்தலாம் என்று, அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.
விரைவில் திறக்கப்பட்டால், கலெக்டர் அலுவலகம் முன், போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு பிறக்கும் என்று, கலெக்டர் அலுவலக பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.