/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எப்போதெல்லாம் கை கழுவ வேண்டும்?
/
எப்போதெல்லாம் கை கழுவ வேண்டும்?
ADDED : ஜூன் 30, 2024 11:00 PM
சாப்பிடுவதற்கு முன்னர் கைகழுவுவதுபோலவே, வேறு சில சூழல்களிலும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
வீட்டிலிருக்கும் செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகோ அல்லது அவற்றைச் சுத்தம் செய்த பிறகோ கை கழுவ வேண்டும்.
காலையில் படுக்கையிலிருந்து எழுந்த பிறகும், கழிப்பறை சென்று வந்த பிறகும், சின்னக் குழந்தைகளைத் துாக்குவதற்கு முன்பும், நன்றாகக் கைகளைக் கழுவ வேண்டும்.
ஏதேனும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்களைக் கவனித்துக்கொள்ளும்பட்சத்தில், அடிக்கடி கை கழுவ வேண்டும்.
உங்களுக்கே சளி, இருமல் தொந்தரவு இருக்கிறது என்றால், முடிந்தவரை மற்றவர்களைத் தொடாமல் இருக்கவும்.
கை கழுவும்போது, பொறுமையாக கையின் அனைத்துப் பகுதிகளிலும், தண்ணீர்விட்டு கழுவ வேண்டும்.
வெளியே செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டால், ஹேண்ட் சானிட்டைஸர்ஸ் பயன்படுத்தலாம்.