/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தகுந்த நேரத்தில் நான் குரல் கொடுக்கிறேன்!' முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆறுதல்
/
'தகுந்த நேரத்தில் நான் குரல் கொடுக்கிறேன்!' முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆறுதல்
'தகுந்த நேரத்தில் நான் குரல் கொடுக்கிறேன்!' முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆறுதல்
'தகுந்த நேரத்தில் நான் குரல் கொடுக்கிறேன்!' முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆறுதல்
ADDED : ஏப் 15, 2024 11:34 PM
பொள்ளாச்சி அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேயனை, ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பிரசாரம் செய்யவந்தார். தனியார் ேஹாட்டலில் தங்கிய அவரை, குடியிருப்போர் சங்கங்கள், தொழில் வர்த்தக சபை, வியாபாரிகள் சங்கத்தினர், டாக்டர்கள் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் சந்தித்து பேசினர்.
குடியிருப்போர் நலச்சங்கத்தினர் சிலர், 'சொத்து வரி தான் அதிகமாக இருக்கிறது; இருக்க இருக்க வரி ஏறிக்கொண்டே இருப்பதால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறோம் என, மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.
இதே போன்று, கடை உரிமையாளர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கத்தினர், 'ஏற்கனவே தொழில் வரி செலுத்தி வருகிறோம்; தொழில் உரிமம் எடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்கின்றனர். அதற்கு, 1,500 முதல், 10,000 ரூபாய் வரை செலுத்தணும்; இது கடை வாரியாக மாறுபடும் என கூறுகின்றனர். இதை ரத்து செய்ய வேண்டும்,' என தெரிவித்தனர்.
மேலும், மின் கட்டண உயர்வால் தென்னை நார் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 'பாரத் தேங்காய் எண்ணெய்' வினியோகம் செய்தல், தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்; கேரளா வாடல் நோயினால் முழுமையாக பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி அகற்றிட, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் சங்கத்தினர், தென்னை நார் உற்பத்தியாளர்கள் மனு கொடுத்தனர்.
இதையெல்லாம் கேட்டபின், 'தகுந்த நேரத்தில் உங்களது பிரச்னைக்கெல்லாம் குரல் கொடுத்து சரி செய்வேன்; என்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுப்பேன்,' என, பழனிசாமி ஆறுதலாக பேசியதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

