/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற அணிகள் எவை?
/
ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற அணிகள் எவை?
ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற அணிகள் எவை?
ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற அணிகள் எவை?
ADDED : மார் 25, 2024 01:00 AM
கோவை:மாவட்ட அளவிலான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றனர்.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'காசா கிராண்ட்' கோப்பைக்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி மாவட்டத்தின், பல்வேறு மைதானங்களில் நேற்று முன்தினம் நடந்தது.
* பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்த போட்டியில், பெனாடிக் போர்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில், ரத்தினம் கல்லுாரி கிரிக்கெட் கிளப் அணியை வீழ்த்தியது.
ரத்தினம் அணியின் ராகுல் (79), ஐயப்பன் (3 விக்கெட்), பெனாடிக் போர்ஸ் அணியின், மணிகண்டன் (4 விக்கெட், 36 ரன்), வெங்கடேஷ் (47) ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
* எஸ்.என்.எம்.வி., கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில், ஸ்ரீ சி.சி., அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.பி., குரூப்ஸ் அணியை வீழ்த்தியது.
ஸ்ரீ சி.சி.,யின் ராகுல் (42), அவிநாஷ் (40), ஹெஜின் பிரகாஷ் (39), பிரவீன் குமார் (38), கணேஷ் பெருமாள் (5 விக்கெட்), வெங்கடேச பாபு (3 விக்கெட்), ஆர்.பி., குரூப்ஸ் அணியின் பினீஸ் (39) ஆகியோர் அசத்தலாக விளையாடினர்.
* பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்த போட்டியில், டெவில் ஸ்ட்ரோக்கர்ஸ் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் கோயம்புத்துார் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
கோயம்புத்துார் ரைடர்ஸ் அணியின் கோகுல்நாத் (61), நாகராஜ் (39) மற்றும் டெவில் ஸ்ட்ரோக்கர்ஸ் அணியின் சக்திவேல் (44), ஸ்ரீநிவாசன் (3 விக்கெட்), ராகுல் (5 விக்கெட்) திறமையாக விளையாடினர்.

