/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவத்தேர்வுகள் துவங்குவதில் ஏன் தாமதம்? பல்கலை தேர்வு பிரிவு அதிகாரி விளக்கம்
/
பருவத்தேர்வுகள் துவங்குவதில் ஏன் தாமதம்? பல்கலை தேர்வு பிரிவு அதிகாரி விளக்கம்
பருவத்தேர்வுகள் துவங்குவதில் ஏன் தாமதம்? பல்கலை தேர்வு பிரிவு அதிகாரி விளக்கம்
பருவத்தேர்வுகள் துவங்குவதில் ஏன் தாமதம்? பல்கலை தேர்வு பிரிவு அதிகாரி விளக்கம்
ADDED : ஏப் 29, 2024 11:42 PM
கோவை;பாரதியார் பல்கலையின் கீழ், இளநிலை, முதுநிலை மாணவர்களின் பருவத்தேர்வுக்கான தேதி இதுவரை அறிவிக்கப்படாமல் இருப்பதால், குழப்பம் நிலவுகிறது.
பருவத்தேர்வுகள் ஏப்., முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் துவக்கி, ஏப்., இறுதியில் முடிக்கப்படும். மே முழுவதும் மதிப்பீட்டு பணி முடிக்கப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஆனால், பாரதியார் பல்கலையில்,லோக்சபா தேர்தல் முடிந்தும், இதுவரை தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது.
தேர்வுகள் தள்ளிப்போகும் பட்சத்தில், இறுதியாண்டு மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அடுத்தாண்டுக்கான வகுப்புகள் துவக்குவதிலும் தாமதம் ஏற்படும்.
இப்பல்கலையில், துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, கல்லுாரி கவுன்சில் இயக்குனர், தொலைதுார கல்வி மைய இயக்குனர் என, அனைத்து முக்கிய பதவிகளும் காலியாக இருப்பதால், பல்வேறு நிர்வாக சிக்கல்கள் நீடிக்கின்றன.
பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) பொன்பாண்டியன் கூறியதாவது:
மே 15ம் தேதி முதல் தேர்வுகள் துவங்கும். கடந்தாண்டு, 'நான் முதல்வன்' திட்டத்தில் நீடித்த குழப்பங்களை சரி செய்து, தேர்வுகள் நடத்த தாமதம் ஏற்பட்டது.
ஒரு பருவத்தில், 90 வேலைநாட்கள் குறைந்தது இருக்க வேண்டும் என்பது விதிமுறை. அதன் தொடர்ச்சியே, தற்போதையே தாமதத்திற்கும் காரணம். லோக்சபா தேர்தலால், ஒரு வாரம் தாமதம் ஏற்பட்டது.
சில கல்லுாரிகள் தகவல்களை சரியான நேரத்திற்கு அனுப்புவதிலும் தாமதம் இருந்தது.
தாமதமாக தேர்வுகள் துவங்கினாலும், மதிப்பீட்டு பணிகளை விரைந்து முடித்து, தேர்வு முடிவுகள் விரைவாக அறிவிக்கப்படும்.
இறுதியாண்டு மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில், அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

