/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அரசியல் கட்சிகள் எதற்காக நடத்துகிறோம்?' பாடம் நடத்திய எம்.எல்.ஏ., ஜெயராமன்

ADDED : ஏப் 02, 2024 11:57 PM
''மக்கள் நம்மை மதிக்க வேண்டுமென்றால், உழைப்பை வெளிப்படுத்தி வெற்றியை பெற வேண்டும்,'' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி அ.தி.மு.க., தேர்தல் பணிமனையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
அரசியல் கட்சிகள் எதற்காக நடத்துகிறோம் என, தெரிந்து கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகள், ஆட்சி அதிகாரத்துக்கு வந்து, மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும்.
ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டுமானால், நாம் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், முதியோர் உதவித்தொகை போன்றவை பெற்றுத்தர நாம் அதிகாரத்துக்கு வர வேண்டும்.
மக்கள் நம்மை மதிக்க வேண்டுமென்றால், உழைப்பை வெளிப்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம்.
எனவே, இத்தேர்தலை மற்ற தேர்தல் போன்று எண்ணாமல், வெற்றியை பெற வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்து, ஒற்றுமையாக இருந்து நாம் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.