/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஓட்டு கேட்டு மட்டும் எதுக்காக வர்றீங்க?' பொரிந்து தள்ளிய பெண் வாக்காளர்

ADDED : ஏப் 07, 2024 12:50 AM

கோவை மசக்காளிபாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகமான குடும்பங்கள் வசிப்பதாக கூறியதும், தி.மு.க., மகளிரணியினர் நோட்டீஸ் கொடுக்கச் சென்றனர்.
அவர்களை பார்த்த பெண் ஒருவர் ஆவேசம் அடைந்து, ''மசக்காளிபாளையம் ரோடு எப்படி இருக்குன்னு பாருங்க; தண்ணீர் வந்து எத்தனை நாளாச்சுன்னு பாருங்க. குப்பை எடுக்க வர்றாங்களான்னு கேளுங்க,'' என பொரிந்து தள்ளினார்.
அதற்கு, ஓட்டு கேட்டு வந்த பெண்மணி, 'இப்போ, 14 நாளைக்கு ஒரு தடவை தான் தண்ணீர் தர்றோம். கவுன்சிலருக்கு போன் செய்கிறேன்; கேட்டுச் சொல்கிறேன். இந்தாங்க கார்டு' என, கூறி, விசிட்டிங் கார்டு கொடுத்தார். எனினும் அவர், 'இப்ப ஓட்டு கேட்டு மட்டும் ஏன் வர்றீங்க. நோ சான்ஸ்; தயவு செய்து வராதீங்க. ஓட்டு கேட்டு மட்டும் வராதீங்க,'' என்றார்.
அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பெண்களை சமாளிக்க முடியாமல், 'நீங்க ஓட்டு போடாட்டியும் பரவாயில்லை. உங்கள் குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கிறோம்' என, தி.மு.க., மகளிரணியினர் கூறி விட்டுச் சென்றனர்.