/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூஜையறை எதுக்கு குட்டிக்கோவிலே இருக்கு! 'வுட்ஸ்பார்க்' பர்னிச்சரில் சிறப்பு அறிமுகம்

ADDED : ஆக 17, 2024 01:14 AM

வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ற பர்னிச்சர்களை வழங்குவதற்கு பிரசித்தி பெற்ற 'வுட்ஸ்பார்க்' பர்னிச்சர் 'பி' ஹாலில் அரங்கு அமைத்துள்ளது. இந்த கண்காட்சிக்காகவே முதன்முறையாக, குட்டிக் கோவில் (மந்திர்) போன்ற பூஜை அறையை வடிவமைத்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.
ஆறு அடி உயரமுள்ள இந்த குட்டிக் கோவிலில், சிலைகள், படங்கள் என விருப்பத்துக்கேற்ப நிர்மாணித்து வழிபடலாம்.
கருவறையை நினைவுபடுத்தும் வடிவத்தில், படிக்கட்டுகளுடன் பூஜைப்பொருட்களை வைத்துக்கொள்ள தனி 'டிராயர்' உள்ளது. இந்த பூஜை அறையை நீங்கள் விரும்பும் கோவில் வடிவத்திலும் கஸ்டமைஸ் செய்து தருகிறார்கள்.
'வுட்ஸ்பார்க்'கின் மற்றுமொரு ஸ்பெஷல், யூ.வி. போர்டில், உயர்தரத்திலான மாடுலர் கிச்சன். சதுரடிக்கு ரூ.1,200 முதல் ரூ.2,500 வரை தேவைக்கேற்ப கஸ்டமைஸ் செய்து தருகின்றனர்.
வழக்கமான கைப்பிடி இல்லாமல், புரொபைல் ஹேண்டில் டிசைன், ஈர்க்கும் விதத்தில் உள்ளது. பட்ஜெட், வின்டேஜ், கிளாசிக் என, தேவைக்கேற்ப வடிவமைத்துக் கொடுக்கிறார்கள். இந்த மாடுலர் கிச்சனுக்கு 20 ஆண்டுகள் வாரண்டி தருகின்றனர்.
அனைத்து பர்னிச்சர் ரகங்களுக்கும் 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி உண்டு. 'தினமலர்' கண்காட்சிக்காகவே, தயாரிப்பு விலையில் தருகின்றனர்.