/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீன்கரை ரோடு விரிவாக்கம்; கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
/
மீன்கரை ரோடு விரிவாக்கம்; கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
மீன்கரை ரோடு விரிவாக்கம்; கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
மீன்கரை ரோடு விரிவாக்கம்; கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
ADDED : ஆக 26, 2024 01:22 AM

ஆனைமலை:ஆனைமலை அருகே, மீன்கரை ரோடு நான்கு வழிச்சாலை பணிகளை, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்டத்துக்கு உட்பட்ட, ஆனைமலை உட்கோட்டத்தில், அவிநாசி - திருப்பூர் - பல்லடம் - பொள்ளாச்சி - மீன்கரை ரோடு வழியாக கேரளாவுக்கு போக்குவரத்து அதிகமுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பொள்ளாச்சி வழியில் செல்லும் முக்கிய வழித்தடமாக இந்த ரோடு உள்ளது.
இந்த வழித்தடத்தில், மீனாட்சிபுரம் ரயில்வே கேட் முதல் கணபதிபாளையம் வரை முதல் கட்டமாக, நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்படுகிறது. மொத்தம், 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பணிகள் நடக்கின்றன.
நெடுஞ்சாலைத்துறை கோவை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் சரவணசெல்வம், ஆனைமலை உட்கோட்ட பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ரோடு பணிகளை விரைந்து முடிக்க கண்காணிப்பு பொறியாளர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கணபதிபாளையம் முதல் கேரளா மாநில எல்லை வரை உள்ள சாலை நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது,' என்றனர்.