/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பரவலாக பெய்யும் மழை ;தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
/
பரவலாக பெய்யும் மழை ;தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
ADDED : ஜூலை 01, 2024 12:12 AM

பொள்ளாச்சி;வால்பாறையில், பல்வேறு நிறுவனங்களின் தேயிலை தோட்டங்களும், அரசின் டான்டீ நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களும் உள்ளன. இங்கு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பகுதியில், தொடரும் மழையால், தேயிலை தோட்டங்களில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்கள் அனைத்தும் பச்சைக் கம்பளம் போர்த்தியது போல மாறியுள்ளது.
மேலும், தேயிலை தோட்டங்களில் இலைகள் அறுவடைக்கு தயாராகியுள்ளது. இருப்பினும், பகலில் நீடிக்கும் மழையால், சில பகுதிகளில் தேயிலை பறிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழையால், தேயிலையின் எடை கூடும் என்பதால், சில நிறுவனங்கள் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் கூறியதாவது:
தேயிலை வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது. கோடையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் கொளுந்து பறிப்பது சவாலாக இருக்கும். ஆனால், தற்போது, பெய்து வரும் மழையால், தோட்டங்கள் பசுமையாக மாறி வருகிறது.
வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் காணப்பட்டால், பசுந்தேயிலை உற்பத்தி அதிகரித்து காணப்படும். அறுவடையால், தொழிற்சாலைகளுக்கான இலை கொள்முதல் கூடுதலாகும்.
இவ்வாறு, கூறினர்.