/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகன விபத்தில் ஏட்டு மனைவி பலி
/
வாகன விபத்தில் ஏட்டு மனைவி பலி
ADDED : மே 27, 2024 11:21 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், கல்லாறு அருகே, இருசக்கர வாகனத்தின் மீது, வேன் மோதியதில், தலைமை காவலரின் மனைவி இறந்தார்.
கோவை சின்ன தடாகம், வடக்கு வீதியைச் சேர்ந்தவர் தனசேகரன், 40, இவர் கோவை மாநகர ஆயுதப் படையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவித்ரா, 35. இவர்களின் பெண் குழந்தை கயல்,8, தனசேகரின் அண்ணன் குழந்தை அன்பு,4 ஆகிய நான்கு பேரும் கல்லாறு சென்று விட்டு, மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
தனசேகர் தனியாக ஒரு மோட்டார் சைக்கிளிலும், பவித்ரா மற்றும் இரண்டு சிறுமிகள் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர். ஊட்டி சாலையில் கல்லாறு பசுமை நர்சரி அருகே வந்து கொண்டிருந்த பொழுது, எதிரே வந்த வேன், பவித்ரா ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது திடீரென்று மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பவித்ரா இறந்தார்.
காயமடைந்த சிறுமிகள் கயல் மற்றும் அன்பு ஆகியோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து, வேனை ஓட்டி வந்த, நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேளியை சேர்ந்த டிரைவர் அணு, 31 என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
கணவன் கண் முன்னே, மனைவி விபத்தில் இறந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.