/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றிகள் நடமாட்டம்; தடாகம் பகுதியில் அதிகரிப்பு
/
காட்டுப்பன்றிகள் நடமாட்டம்; தடாகம் பகுதியில் அதிகரிப்பு
காட்டுப்பன்றிகள் நடமாட்டம்; தடாகம் பகுதியில் அதிகரிப்பு
காட்டுப்பன்றிகள் நடமாட்டம்; தடாகம் பகுதியில் அதிகரிப்பு
ADDED : மார் 09, 2025 11:32 PM
பெ.நா.பாளையம்; சின்னதடாகம் பகுதியில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விழிப்புடன் செல்லுமாறு விவசாய சங்கத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கோவை வடக்கு மலையோர கிராமங்களில் தற்போது, காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் இரவு நேரங்களில் அதிகரித்து காணப்படுகிறது.
இரவு நேரங்களில் துடியலுார் - தடாகம் ரோடு, கணுவாய், ஆனைகட்டி ரோடுகளில் காட்டுப் பன்றிகளின் கூட்டம், கூட்டமாக வருகிறது. காட்டுப்பன்றிகளைத் தேடி சிறுத்தை வரும் என்பதால், தடாகம் வட்டாரத்தில் இரவு நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, விவசாய சங்கத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ''வனப்பகுதியில் இருந்து மூன்று கி.மீ., கடந்து வரும் காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல தமிழக அரசு அனுமதித்துள்ளது.
ஆனால், சின்னதடாகம், பாப்பநாயக்கன்பாளையம், வரப்பாளையம், மடத்துார், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியையொட்டி உள்ள வேளாண் நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
எனவே விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தும் காட்டு பன்றிகளை உடனடியாக சுட்டுக் கொல்ல வனத்துறையினர் விதிகளை திருத்தி அமல்படுத்த முன்வர வேண்டும்'' என்றனர்.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், ''பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உரிய நடைமுறைகளை பின்பற்றி, காட்டுப்பன்றிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.