/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் 'கார் பார்க்கிங்' கண்டறிந்து தடுக்கப்படுமா
/
ரோட்டில் 'கார் பார்க்கிங்' கண்டறிந்து தடுக்கப்படுமா
ரோட்டில் 'கார் பார்க்கிங்' கண்டறிந்து தடுக்கப்படுமா
ரோட்டில் 'கார் பார்க்கிங்' கண்டறிந்து தடுக்கப்படுமா
ADDED : மார் 04, 2025 07:11 PM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில், தோட்டம் மற்றும் கார் பார்க்கிங் அமைத்து, வழித்தட ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், புதிய குடியிருப்புகளின் கட்டுமானம் நாளுக்குள்நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப வீதிகளில் புதிதாக தார் சாலைகள் அமைக்கப்பட்டும், தெருவிளக்குள் அமைத்தும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேநேரம், பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில், ரோட்டின் பெரும்பகுதி, தோட்டம் மற்றும் கார் பார்க்கிங் அமைத்து, வழித்தட ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. வீட்டில் முகப்பு பகுதியில், அழகிய பூச்செடிகள் வைப்பதற்கு மாறாக, ரோட்டையே ஆக்கிரமிப்பு செய்வதை சிலர், வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
நகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில், மழைநீர் வழிந்தோடும் ஓடைகள் மாயமாகி விட்டன. 'மனைப்பிரிவு' அமைக்கப்படும்போது, ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன.
இது ஒருபுறமிருக்க, அவரவர் குடியிருப்பு வீடுகளின் முகப்பு பகுதியில், வழித்தடத்தை ஆக்கிரமித்து தோட்டம் மற்றும் கார் பார்க்கிங் 'செட்' அமைக்கின்றனர்.
இதனால், அவசர தேவைக்கு அவ்வழித்தடத்தைக் கடந்து செல்லும் மக்கள் பாதிக்கின்றனர். விதிமீறலைக் கண்டறிந்து தடுக்க, நகராட்சி நிர்வாகத்தினர், அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ரோடு பகுதியை விதிமீறி ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.