ADDED : மே 29, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் அருகே உள்ளது. தெற்கு தொகுதியில் தி.மு.க.,வின் செந்தில்பாலாஜி வென்றார். இவருக்கு இந்த அலுவலகத்தை ஒதுக்க பொதுப்பணித்துறை மராமத்து பணி செய்கிறது.
செந்தில்பாலாஜி தேர்தல் பரப்புரையின்போது தனது சொந்த செலவில் ஒவ்வொரு வார்டிலும் எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பேன்; மக்கள் குறைகளை தெரிவிக்கலாம் என கூறியிருந்தார். அதன்படி அனைத்து வார்டுகளிலும் அலுவலகம் திறப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
