/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
படகு சவாரிக்கான கட்டணம் குறையுமா?
/
படகு சவாரிக்கான கட்டணம் குறையுமா?
ADDED : செப் 17, 2024 10:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை: தொடர் விடுமுறை காரணமாக, வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்தனர். நகராட்சி பூங்காவை கண்டு ரசித்த பின், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள படகுஇல்லத்தில், ஆர்வத்துடன் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.
நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லம் பகுதியில், சுற்றுலா பயணியருக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்துதரப்படவில்லை. இந்நிலையில், படகு சவாரி செய்ய, ஒரு நபருக்கு கட்டணமாக, 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணத்தை பாதியாக குறைக்க வேண்டும். சுற்றுலா பயணியர் வசதிக்காக உணவகம், கழிப்பிட வசதி ஏற்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வலியுறுத்தினர்.