/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெருநாய்களுக்கு சிகிச்சை அளிக்க தன்னார்வ அமைப்புகள் முன்வருமா?
/
தெருநாய்களுக்கு சிகிச்சை அளிக்க தன்னார்வ அமைப்புகள் முன்வருமா?
தெருநாய்களுக்கு சிகிச்சை அளிக்க தன்னார்வ அமைப்புகள் முன்வருமா?
தெருநாய்களுக்கு சிகிச்சை அளிக்க தன்னார்வ அமைப்புகள் முன்வருமா?
ADDED : ஜூன் 24, 2024 10:44 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் ஊனமுற்ற, நோய்வாய்ப்பட்ட தெருநாய்களைக் கண்டறிந்து, சிகிச்சை அளிக்க தன்னார்வலர்கள் முன்வர வேண்டும்.
பொள்ளாச்சி நகர் மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராமங்களில் அதிகப்படியான தெருநாய்கள் உள்ளன. சில பகுதிகளில், தெருநாய்கள் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இருப்பினும், குடியிருப்பு பகுதிகளில், இரவு நேரங்களில் உலா வரும் நாய்கள், திருட்டு, வழிப்பறி போன்ற செயல்களை, மறைமுகமாக தடுத்தும் வருகின்றன.
இவைகள், வீடு மற்றும் உணவகங்களில் வீணாகும் உணவுகளை உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன. அதேநேரம், பல பகுதிகளில், வாகன விபத்தில் சிக்கி கால்கள் முறிந்தும், தோல் நோயால் பாதிப்படைந்தும் அதிகப்படியான நாய்கள், ஆதரவின்றி சுற்றுகின்றன. இவைகளை, மீட்கவும், உரிய சிகிச்சை அளிக்கவும் தன்னார்வ அமைப்புகள் முன் வரவேண்டும்.
மக்கள் கூறியதாவது: தெரு நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் முனைப்பு காட்டுவதில்லை. அதேபோல, பல இடங்களில் ஊனமுற்ற, நோய் பாதிப்படைந்த நாய்கள் சுற்றுகின்றன.
ஏதேனும் ஒரு வாகனத்தில் சிக்கி காயமடைந்த நாயை மீட்கவோ, பராமரிக்கவோ எவரும் முன்வருவதில்லை. தன்னார்வலர்கள், மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும். காயம்பட்ட, நோய் பாதிப்பில் தவிக்கும் நாய்களின் நிலையைப் பொருத்து அந்த இடத்திலேயே சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு, உள்ளாட்சி அமைப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.