sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உங்க ரயில் இன்று கோவைக்கு வருமா, வராதா? பயணிகளே கொஞ்சம் சரிபார்த்துக்கோங்க!

/

உங்க ரயில் இன்று கோவைக்கு வருமா, வராதா? பயணிகளே கொஞ்சம் சரிபார்த்துக்கோங்க!

உங்க ரயில் இன்று கோவைக்கு வருமா, வராதா? பயணிகளே கொஞ்சம் சரிபார்த்துக்கோங்க!

உங்க ரயில் இன்று கோவைக்கு வருமா, வராதா? பயணிகளே கொஞ்சம் சரிபார்த்துக்கோங்க!


ADDED : செப் 05, 2024 11:42 PM

Google News

ADDED : செப் 05, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:ஈரோடு, மேட்டுப்பாளையம், பாலக்காடு பகுதிகளில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் மெமு ரயில் சேவையில் இன்று சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோவை வழியாக இயக்கப்பட வேண்டிய சில ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்படும்ஸ்டேஷன்கள்


n பாலக்காட்டில் இருந்து காலை 7:20 மணிக்கு கோவை புறப்படும் மெமு ரயில் (எண்: 06806), இன்று போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனூர் - கோவை இடையேயான சேவை ரத்து செய்யப்படுகிறது.

n மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை 8:20க்கு புறப்படும் மெமு ரயில் (எண்: 06009), வட கோவை ரயில் நிலையத்தில் நின்று விடும். கோவை மற்றும் போத்தனூருக்கு இயக்கப்படாது.

n ஈரோடு - கோவை மெமு ரயில் (எண்: 06801), இருகூரில் நின்றுவிடும். இருகூர் கோவை இடையேயான சேவை ரத்து செய்யப்புகிறது.

n மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10:55 மணிக்கு புறப்படும் மெமு ரயில் (எண்: 06813) வடகோவை வரை மட்டும் இயக்கப்படும். கோவை ரயில் நிலையத்துக்குச் செல்லாது.

புறப்படும் இடம் மாற்றம்


n போத்தனூரில் இருந்து புறப்பட வேண்டிய மெமு ரயில் (எண்:06812), போத்தனூருக்குப் பதிலாக வடகோவையில் இருந்து 10:02 மணிக்குப் புறப்படும்.

n கோவை—சொரனூர் மெமு ரயில் (எண்:06805), கோவைக்குப் பதிலாக, போத்தனூரில் இருந்து மதியம் 12:05 மணிக்குப் புறப்படும்.

n கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்:06814), கோவைக்குப் பதிலாக, வட கோவையில் இருந்து காலை 11:57 மணிக்குப் புறப்படும்.

வழித்தட மாற்றங்கள்


n ஆலப்புழாவில் காலை 6:00 மணிக்கு புறப்படும் தன்பாத் எக்ஸ்பிரஸ் (எண்: 13352) கோவையில் நின்று செல்லாது. பதிலாக போத்தனூரில் நின்று, இருகூர் வழியாக இயக்கப்படும்.

n எர்ணாகுளத்தில் காலை 9:10 மணிக்குப் புறப்படும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் (எண்: 12678), கோவையில் நிற்காது. பதிலாக, போத்தனூரில் நின்று, இருகூர் வழியாக இயக்கப்படும்.

n ஈரோட்டில் காலை 7:15க்கு புறப்படும் பாலக்காடு ரயில் (எண்: 06819), இருகூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும். சிங்காநல்லூர், பீளமேடு, வட கோவை, கோவை ரயில் நிலையங்களுக்கு வராது.

இந்த மாற்றங்கள் இன்று ஒரு நாள் மட்டும் (6ம் தேதி) நடைமுறையில் இருக்கும்.

இந்த அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us