UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 06:44 PM
வால்பாறை: தமிழகத்தில் நேற்று முதல் பெண்கள் கட்டணமில்லா பயணம் செய்யும் வகையில் அரசு பஸ்களில் வெற்றிப்பயணத்திட்டம் துவங்கப்பட்டது. உள்ளூர் பஸ்களில் மட்டுமே பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்து வந்த நிலையில், தற்போது வெளியூர் பஸ்களிலும் பயணம் செய்யலாம் என்பதால், பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த திட்டத்தை வரவேற்கும் வகையில், வால்பாறை த.வெ.க., நகர கழகத்தின் சார்பில் இணை செயலாளர் சையதுஅலி தலைமையில், மகளிர் அணி தலைவி சங்கீதா, இணை அமைப்பாளர்கள் கண்ணகி, சுமித்திரா உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர்.
ரொட்டிக்கடை, கவர்க்கல், வாட்டர்பால்ஸ், அட்டகட்டிக்கு, பொள்ளாச்சி செல்லும் பஸ்களில் கட்டணம் செலுத்தி பெண்கள் பயணம் செய்து வந்தனர். தற்போது வெளியூர் செல்லும் பஸ்களில், அப்பகுதிக்கு மகளிர் கட்டணமில்லா பயணம் செய்தனர்.
