/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.80 லட்சம் இழுத்தடிப்பு சகோதரர் மீது பெண் புகார்
/
ரூ.80 லட்சம் இழுத்தடிப்பு சகோதரர் மீது பெண் புகார்
ரூ.80 லட்சம் இழுத்தடிப்பு சகோதரர் மீது பெண் புகார்
ரூ.80 லட்சம் இழுத்தடிப்பு சகோதரர் மீது பெண் புகார்
ADDED : ஜூன் 26, 2024 10:49 PM
கோவை : புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஞானஜோதி,55. இவரது சகோதரர் ஜெய்சங்கர் கோவையில் வசிக்கிறார். ஞானஜோதி தனது தாயின் மருத்துவ செலவுக்கும், குடும்பத்தை பராமரிக்கவும் கடந்த, 2018 முதல், 2022ம் ஆண்டு வரை வெளியே கடன் வாங்கியும், மகளின் நகைகளை அடகு வைத்தும் ரூ.85 லட்சம் பெற்று, பல பரிவர்த்தனைகளில் ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ளார்.
2019ம் ஆண்டு இத்தொகைக்கான வட்டியை செலுத்திய ஜெய்சங்கர், அதன்பிறகு ரூ.80 லட்சத்தை ஞானஜோதிக்கு தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
கடன் அளித்தவர்கள் பணம் கேட்டு வந்ததால், மன உளைச்சலுக்கு ஆளான ஞானஜோதி, ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.