/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் மோதி பெண் பலி; ரயில்வே போலீஸ் விசாரணை
/
ரயில் மோதி பெண் பலி; ரயில்வே போலீஸ் விசாரணை
ADDED : ஆக 07, 2024 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு பெண் பரிதாபமாக இறந்தார்.
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு, கிணத்துக்கடவு வழியாக நேற்று சென்ற ரயிலில் பெண் ஒருவர் அடிபட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இறந்த பெண் குறித்து விசாரித்த போது, கிணத்துக்கடவு, கோவில்பாளையத்தை சேர்ந்த கிருபாநந்தினி, 32, என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து சடலத்தை மீட்ட போலீசார் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.