/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துப்பாக்கியால் சுட்டு பெண் கொலை
/
துப்பாக்கியால் சுட்டு பெண் கொலை
ADDED : மார் 06, 2025 07:05 AM
சூலுார்; துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் உடலில், 29 பால்ரஸ் ரவைகள் இருந்தது, பிரேத பரிசோதனை வாயிலாக தெரியவந்துள்ளது.
கோவை அடுத்த பட்டணம்புதூரில், கடந்த, 3ம் தேதி தனியார் பள்ளி ஆசிரியை சங்கீதா, கணவர் கிருஷ்ணகுமாரால், நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
பாலக்காடு சென்று தனது வீட்டின் முன் கிருஷ்ணகுமாரும் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சங்கீதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஒரு முறை நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டதும், அந்த குண்டில் இருந்து, 29 பால்ரஸ் ரவைகள் உடலை துளைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
வன விலங்குகளை விரட்ட பயன்படுத்தப்படும் நாட்டுத் துப்பாக்கியை கிருஷ்ணகுமார் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.